வெயில் காலம் தொடங்கியாச்சு…! கண்டிப்பா இந்த ஜூஸ் குடிங்க…!
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய, குளுமையான வெள்ளரிக்காய் ஜூஸ் செய்வது எப்படி?
வெயில் காலம் தொடங்கி விட்டாலே, நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஜூஸ்களை விரும்பி குடிப்பதுண்டு. அந்த வகையில், வெயில் காலத்தில், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய, குளுமையான வெள்ளரிக்காய் ஜூஸ் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- வெள்ளரிக்காய் – 2
- இஞ்சி – சிறுதுண்டு
- சீனி – சிறிதளவு
- உப்பு – சிறிதளவு
- எலுமிச்சை – கால் பாதி
செய்முறை
முதலில் வெள்ளரிக்காயை நன்கு கழுவி சிறு சிறு துண்டுகளாக வெட்டி, மிக்சியில் போட்டு கொள்ள வேண்டும். அதனுடன் உப்பு, சீனி, இஞ்சி எலுமிச்சை சாறு மற்றும் பிரிட்ஜில் வைத்த தண்ணீர் சேர்த்து, அணைக்க வேண்டும்.
பின் அதனை ஒரு வடிகட்டியில் வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். மிகவும் குளுமையாக இருக்க வேண்டும் என விரும்புபவர்கள், அதனுடன் ஐஸ் கட்டிகளை சேர்த்து குடிக்கலாம்.