SRILANKA SPECIAL : முட்டையை வைத்து காபி போடலாமா..? வாங்க பார்க்கலாம்..!
நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே முட்டை என்றால் விரும்பி சாப்பிடுவதுண்டு. அதே போல் முட்டையை வைத்து செய்யக்கூடிய உணவுகளையும் விரும்பி சாப்பிடுவதுண்டு. இதுவரை முட்டையை வைத்து விதவிதமாக உணவு செய்ததை தான் பார்த்திருப்போம். தற்போது இந்த பதில் ஸ்ரீலங்கா ஸ்பெஷலான, முட்டையை வைத்து காப்பி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- காபி தூள் – 1 டீஸ்பூன்
- சீனி – 2 ஸ்பூன்
- சூடு தண்ணீர் -1 டம்ளர்
- நாட்டுக்கோழி முட்டை – 1
செய்முறை
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் ஒரு டம்ளரில், ஒரு டீஸ்பூன் காபித்தூள், சீனி 2 டீஸ்பூன், ஒரு டம்ளர் சுடுதண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் தனியாக ஒரு டம்ளரில் நாட்டு கோழி முட்டையை உடைத்து ஊற்றி அதனை நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
பின் இரண்டையும் நன்றாக கலந்து இரண்டு டம்ளர்களில் மாறி, மாறி ஊற்ற வேண்டும். பின் சூடாக பருக வேண்டும். இந்த காபியை குடிப்பதால் நமது உடல் ஆரோக்கியமும் மேம்படும்.