Srilanka Coconut Rotti : ஸ்ரீலங்கா ஸ்டைலில் அசத்தலான ரொட்டி செய்வது எப்படி..?

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவு ரொட்டி. ரொட்டியில் பலவகை உள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில், வாட்டு ரொட்டி, பொரித்த ரொட்டி என பலவகை உள்ளது. அந்த வகையில், தற்போது இந்த பதிவில் இலங்கையில் செய்யக்கூடிய ரொட்டி (Srilanka Coconut Rotti) பற்றி பார்ப்போம்.
தேவையானவை
- மைதா மாவு – அரை கிலோ
- தேங்காய் – பாதி
- உப்பு – தேவையான அளவு
- ஆப்பசோடா – சிறிதளவு
Srilanka Coconut Rotti செய்முறை
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, துருவிய தேங்காய், உப்பு, ஆப்பசோடா சிறிதளவு சேர்த்து ரொட்டி மாவு பதத்தில் கிளறி, அரை மணி நேரம் அப்படியே மூடி வைக்க வேண்டும்.
பின் தோசை கல்லை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்னெய் தடவி, ரொட்டியை தட்டி கல்லில் இருபக்கமும் மாறி மாறி புரட்டி போட்டு எடுக்க வேண்டும். இப்பொது சுவையான ஸ்ரீலங்கா ஸ்டைல் தேங்காய் ரொட்டி தயார்.
எப்போதும் ஒரே வகையான ரொட்டியை செய்து சாப்பிடாமல், ஸ்ரீலங்கா ஸ்டைல் தேங்காய் ரொட்டி செய்து உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025