‘பத்து நிமிஷத்துல பஞ்சு போன்ற அப்பம்’: ட்ரை பண்ணி பாருங்க!
வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற அப்பத்தை ட்ரை பண்ணி பாருங்க..
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற அப்பத்தை ட்ரை பண்ணி பாருங்க..
தேவையான பொருட்கள்;
- கோதுமை மாவு =இரண்டு டம்ளர்
- வெல்லம் = ஒரு டம்ளர்
- ஏலக்காய்= அரை ஸ்பூன்
- சோடா உப்பு= கால் ஸ்பூன்
- எண்ணெய்= தேவையான அளவு
செய்முறை;
ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் வைத்து வெல்லத்தையும் சேர்த்து கொள்ளவும். வெல்லம் கரைந்த பிறகு அடுப்பை அணைத்து விடலாம். பாகுபதம் வர தேவையில்லை. இப்போது அந்த வெல்ல கரைசலை வடிகட்டி கொள்ளவும். பிறகு எடுத்து வைத்துள்ள கோதுமை மாவுடன் சிறிது சிறிதாக ஊற்றி கலந்து கொள்ளவும்.
கட்டிகள் இல்லாமல் தோசை மாவு பதத்திற்கு கலந்துகொண்டு பத்து நிமிடம் மூடி வைத்துவிட வேண்டும். இப்போது அகலமான பாத்திரத்தில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றிக் கொள்ளவும். பத்து நிமிடம் கழித்து மாவை சூடான எண்ணெயில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பொறித்து எடுக்கவும் இப்போது பஞ்சு போன்ற சாப்டான அப்பம் ரெடி..