Mudakathan Keerai : மூட்டுவலி பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா..? அப்ப வாரத்திற்கு ஒரு நாள் இந்த துவையலை சாப்பிடுங்க..!

SPINACH

இன்றைய காலகட்டத்தில் 30 வயதிற்கு மேல் சென்று விட்டாலே, மூட்டு வலி,கை, கால் வலி என பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட நாம் சில சிகிச்சைகளை மேற்கொள்கிறோம். இல்லையென்றால், மருந்தகங்களில் மாத்திரை வாங்கி பயன்படுகிறோம். ஆனால், சில சமயங்களில் இது நமக்கு வேறு சில பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும்.

எனவே நமக்கு உடல்ரீதியாக ஏற்படக்கூடிய பிரச்சனைகளை இயற்கையான முறையில் தீர்க்க முயல்வது சிறந்தது. அந்த வகையில் தற்போது இந்த பதிவில் மூட்டுவலி பிரச்னைக்கு சிறந்த மருந்தான முடக்கத்தான் கீரையை வைத்து துவையல் செய்து சாப்பிடுவது எப்படி என்று பார்ப்போம்.

முடக்கத்தான் கீரையில் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய பலவகையான நன்மைகள் உள்ளது. இந்த கீரையில், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இந்த கீரையை நமது உணவில் சேர்த்து கொளவதால், மூட்டுவலி, மலசிக்கல், கண் சம்பந்தமான பிரச்சனை உள்ளிட்ட பிரச்னைகளை போக்கி, நமது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

தேவையானவை 

  • வர மிளகாய் – 4
  • உளுத்தம் பருப்பு – 2 ஸ்பூன்
  • முடக்கத்தான் கீரை –
  • கடலை பருப்பு – 1 ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • புளி – சிறிய துண்டு

செய்முறை 

முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு கடாயில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் வரமிளகாய், உளுத்தம் பருப்பு, முடக்கத்தான் கீரை (Spinach), கடலைப்பருப்பு, உப்பு, புளி ஆகிய எல்லாவற்றையும் சேர்த்து சற்று வதக்கிக் கொள்ள வேண்டும்.

பின்பு அதனை இறக்கி ஆறவிட்டு, ஒரு மிக்ஸியில் வதக்கி வைத்துள்ள அனைத்தையும் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.இப்பொது  சுவையான சத்தான முடக்கத்தான் துவையல் தயார். இந்த துவையலை வெறும் சாதத்துடன் சாப்பிடலாம்.

இந்த துவையலை நாம் வாரத்திற்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தாலே நமது உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் தீர்ந்துவிடும். முக்கியமாக மூட்டு வலி பிரச்சனை உள்ளவர்கள் இந்தக் கீரையை வாரத்திற்கு ஒருமுறை சாப்பிடுவது மிகவும் சிறந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்