ஆடிப்பெருக்கு ஸ்பெஷல்- காப்பரிசி செய்வது எப்படி? வாங்க தெரிஞ்சுக்கலாம்..

kapparisi (1)

ஆடிப்பெருக்கு ஸ்பெஷல்- பாரம்பரிய மிக்க காப்பரிசி  செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்;

  • பச்சரிசி =ஒரு டம்ளர்
  • வெல்லம் = ஒரு டம்ளர்
  • பொட்டுக்கடலை =100 கிராம்
  • கருப்பு எள்ளு= 3 ஸ்பூன்
  • நெய் =ஒரு ஸ்பூன்
  • தேங்காய்= அரை மூடி
  • ஏலக்காய் =4

Raw rice

செய்முறை;

முதலில் பச்சரிசியை இரண்டு முறை கழுவி ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு அதை தண்ணீர் அல்லாமல் வடித்து ஈரத்துணியில் போட்டு  நிழலில் உலர்த்தி  கொள்ளவும். இப்போது தேங்காயை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி தேங்காயை அதிலே பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். அதிலேயே எள்ளையும் லேசாக வறுத்துக் கொள்ளவும்.

jaggery (3)

இப்போது வெல்லத்தையும் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி பாகு  தயார் செய்து கொள்ளவும். இப்போது உலர்ந்த அரிசியை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அதில் பொட்டுக்கடலை, தேங்காய் எள்  ,ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு அதிலே வெல்ல  கரைசலை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறி  கொள்ளவும். இப்போது பாரம்பரிய மிக்க சுவையில் காப்பரிசி தயார் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்