குறட்டை விடும் பழக்கம் உள்ளவரா நீங்கள்.? இதோ அதற்கான தீர்வு.!
தூக்கத்தில் குறட்டை விடுவது என்பது சாதாரணமாக தோன்றலாம். ஆனால் அது உடலில் ஏற்படும் பாதிப்பின் அறிகுறியாகும். இதனால் அவர்களுக்கு தூக்கம் கெடுகிறதோ இல்லையோ பக்கத்தில் தூங்குபவரின் தூக்கம் மிகவும் பாதிப்படையும். பெண்களை விட ஆண்களுக்கு இந்த குறட்டை விடும் பழக்கம் அதிகம் உள்ளது.
இதனால் இதய நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது என பல மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆகவே இந்தக் குறட்டை ஏன் வருகிறது. அதற்கான தீர்வு என்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
நாம் தூங்கும் போது நம்முடைய தசைகள் தளர்வடைந்து விடும். அதனால் நாக்கின் அடிப்பகுதி, உள்நாக்கு போன்றவை சுவாசப் பாதையை ஓரளவு பாதியாக அடைத்து விடும். இந்நிலையில் காற்று செல்ல சிரமம் ஏற்பட்டு தசைகளில் அதிர்வு ஏற்படும். இந்த அதிர்வு தான் குறட்டை என்கிறோம்.
சளி இருமலுக்கு இந்த ரசம் வைங்க.? சளியும் காலி ரசமும் காலி.!
இதைவிட தீவிர நிலை ஒன்று உள்ளது அப்ஸ்ட் ரெக்ட்டிவ் ஸ்லீப் அப்னியா. இது குறட்டையை விட ஒரு படி மேல் எனலாம். கிட்டத்தட்ட 10 முதல் 15 செகண்ட் சுவாச பாதையை முழுமையாக அடைத்து விடும். இதனால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு தூக்கம் பாதிப்படையும்.
குறட்டை ஏன் வருகிறது?
உடல் பருமன், மதுப்பழக்கம் மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், சைனஸ் தொந்தரவு மற்றும் உள்நாக்கில் பிரச்சனை, தாடை பகுதி உள்நோக்கி இருப்பது போன்ற காரணங்களால் குறட்டை ஏற்படுகிறது.
நாம் வீட்டிலேயே இதை பரிசோதித்துக் கொள்ளலாம். வாயை திறக்கும் போது தொண்டையின் பின்புறம் அதாவது உள்நாக்கு தெரிய வேண்டும். அப்படி தெரியவில்லை என்றால் அப்ஸ்ட்ரெக்ட்டிவ் ஸ்லீப் அப்னியா வர வாய்ப்பு உள்ளது.
தம்மா துண்டு கடுகுல இவ்வளவு விஷயம் இருக்கா.? இது தெரியாம போச்சே.!
குறட்டையை குறைப்பதற்கான தீர்வு
- உடல் பருமனை குறைக்க வேண்டும். மது மற்றும் புகைபிடிக்கும் பழக்கத்தையும் குறைத்துக் கொள்ள வேண்டும்.
- தூக்க மாத்திரை, உடல் எடை குறைப்பதற்கான மாத்திரை போன்றவற்றை நிறுத்த வேண்டும் அல்லது மருத்துவரின் ஆலோசனைப்படி மாற்றிக் கொள்ளலாம்.
- தூங்கும்போது இடது புறம் அல்லது வலது புறமாக படுக்க வேண்டும்.
- மூக்கின் துவாரத்தில் நல்லெண்ணையை லேசாக தடவிக் கொள்ளலாம்.
- உயரமான தலையணைகளை பயன்படுத்தலாம்.
- வெதுவெதுப்பான பாலில் மஞ்சத்தூள் கலந்து இரவு தூங்குவதற்கு முன் குடித்து வரலாம்.
- மேலும் இஞ்சி டீ அருந்தலாம் மற்றும் ஏலக்காய் பொடியை தண்ணீர் கலந்து அருந்தி வரலாம்.
- யூகலிப்ட்ஸ் எண்ணையை இரவு தூங்குவதற்கு முன் நுகர்ந்து விட்டு தூங்கச் செல்லலாம். இதன் வாசனை சுவாச பாதையில் ஏற்படும் அடைப்பை குறைக்கும். மேலும் நெஞ்சு சளியை நீக்கும்.
எனவே இந்த வழிமுறைகளை பின்பற்றி குறட்டையை விரட்டி மகிழ்ச்சியான தூக்கத்தை பெறுங்கள் மற்றவர்களுக்கும் மகிழ்ச்சியான தூக்கத்தை கொடுங்கள்.