பப்பாளி இலை கசாயத்தில் இவ்வளவு நன்மைகளா..? வாங்க பார்க்கலாம்..!
நம்மில் பெரும்பாலானவர்கள் வீட்டில், பப்பாளி மரம் இருப்பதுண்டு. இந்த பப்பாளி மரத்தில் காய்க்க கூடிய பழங்களை தான் நாம் அனைவருமே விரும்பி சாப்பிடுவதுண்டு. ஆனால், அந்த பப்பாளி மரத்தின் இலையின் நமது உடல் ஆரோக்கியதாகி மேம்படுத்தக் கூடிய பலவகையான சத்துக்கள் உள்ளது. பப்பாளி இலைகளை சாறு, பொடி, கஷாயம் போன்ற வடிவங்களில் எடுத்துக்கொள்ளலாம்.
தற்போது இந்த பதிவில் பப்பாளி இலையில், என்னென்ன மருத்துவ பயன்கள் உள்ளது, இது எவ்வாறு நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்பது பற்றி பார்ப்போம்.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பீட்டா கரோட்டின், வைட்டமின்கள் A, C, E மற்றும் K, தாதுக்கள் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இயற்கை மூலிகையான பப்பாளி இலையில், இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
பப்பாளி இலை கசாயம் செய்முறை
- பப்பாளி இலை – 1
- சீரகம் – 1 டீஸ்பூன்
- இஞ்சி – சிறிய துண்டு
செய்முறை
முதலில் பப்பாளி இலையை தண்டுகள் இல்லாமல் வெறும் இலையை மட்டும் தனியாக பிரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதனுள் சீரகம் மற்றும் இஞ்சியை போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும்.
இந்த தண்ணீர் கொதித்து, 2 டம்ளர் தண்ணீராக வந்தபின், நாம் அதனை பருக வேண்டும். இந்த கசாயத்தை குழந்தைகளுக்கு 10 முதல் 60 மி.லி வரை கொடுக்கலாம். பெரியவர்கள் ஒரு டம்ளர் பருகலாம்.
ஸ்லேட் குச்சி சாப்பிடும் பழக்கம் உள்ளவரா.? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்..
பப்பாளி இலையை கஷாயமாக மட்டுமல்லாது, வெறும் இலையில் சாறு எடுத்தும் பருகலாம். இவ்வாறு பருகுவது நமது உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை ஏற்படுத்துகிறது.
பொதுவாக மழைக்காலங்களில் நம்மை சுற்றியுள்ள பாக்ஃடீரியா, வைரஸ் போன்றவற்றின் பரவல் அதிகமாக இருக்கும். இதன்காரணமாக மழைக்காலங்களில் ஏற்படக் கூடிய மலேரியா, டெங்கு, டைபாயிடு போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு.
குறிப்பாக டெங்கு காய்ச்சல் பிரச்சனை உள்ளவர்கள் பப்பாளி இலை கசாயத்தை குடித்துவந்தால், நமது உடலில் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்து, இந்த செல்கள் அழிவதை தடுக்கிறது.
இது நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து, வயிற்றுப் புண்களை ஆற்றவும் உதவுகிறது. பப்பாளி இலை சாற்றில் புற்றுநோய் செல்களை அழிக்க கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது. அதே போல் இது உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.