கருச்சிதைவை தடுக்கும் சீத்தாப்பழம்.. ஆரோக்கிய நன்மைகள் இதோ.!

பலரும் விரும்பி சாப்பிட்டு வரும் சீதாப்பழத்தில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகளை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

seetha fruit (1)

பலரும் விரும்பி சாப்பிட்டு வரும் சீதாப்பழத்தில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகளை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

சென்னை : சீசனில் கிடைக்கும் முக்கிய பழ வகைகளில் சீதாப்பழமும் ஒன்று. அதிக விதை கொண்ட பழம் என்பதால் பலராலும் ஒதுக்கப்படுகிறது. ஆனால், பலருக்கும் தெரியாத விஷயமே இந்த பழத்தை நாம் சாப்பிடுவதன் மூலம் சளி முதல் கேன்சர் வரை உள்ள நோய்களை விரட்டக்கூடிய சத்துக்களை கொண்டுள்ளது என்பது தான்.

சீத்தா பழத்தில் உள்ள சத்துக்கள்:

சீதா பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி6 , ஆன்டி  ஆக்சிடென்ட் , கால்சியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, நியாசின், பொட்டாசியம் போன்ற சத்துக்களை உள்ளடக்கியுள்ளது.

சீத்தாப்பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் :

உடல் எடை குறைப்பு :

உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் மற்றும் தைராய்டு பிரச்சனையால் ஏற்பட்ட உடல் எடையை  குறைக்க  சீதா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வரலாம்.

கர்ப்பிணிகள் :

கர்ப்பிணிகள் அவசியம் சாப்பிட வேண்டிய பழங்களில் ஒன்று சீதாப்பழம். ஏனெனில் இது உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. இதனால் கருச்சிதைவு ஏற்படுவது தடுக்கப்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், சிசுவின்  மூளை வளர்ச்சி, நரம்பு மண்டலம், எலும்பு வளர்ச்சி போன்றவற்றிற்கு உதவுகிறது. அது மட்டுமல்லாமல் கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தி, குமட்டல், பசியின்மை போன்றவற்றையும் தடுக்கிறது.

மாரடைப்பு :

சீதா பழத்தில் உள்ள மெக்னீசியம் இதயச் சுவர்களை மேம்படுத்துகிறது. இதயம் சீராக சுருங்கி விரிய உதவி செய்வதோடு மாரடைப்பு ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது.

செரிமான பிரச்சனை :

உணவு சாப்பிட்ட பிறகு ஏற்படும் வயிற்று வலி, அஜீரணம், குமட்டல் போன்றவற்றை குணமாக்குகிறது. இதில் இருக்கும் தாமிரச்சத்து குடலின் இயக்கத்தை சீராக்கி உணவு நன்கு செரிமானமாக உதவுகிறது, மலச்சிக்கலையும் தடுக்கிறது.

சீதாப்பழத்தில் உள்ள டயட்ரின்  நார்ச்சத்து சர்க்கரை அளவை குறைக்கிறது. அதனால் டைப் 2 நீரிழிவு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்வது சிறந்தது.

கொலஸ்ட்ரால் :

சீதாப்பழத்தில் நியாசின் மற்றும் டயட்ரின்  நார்ச்சத்துக்கள் இருப்பதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. மேலும் அனிமியா மற்றும் தோல் புற்றுநோய் ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது.  சரும புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை அழித்து தோல் புற்றுநோய் வருவதை  தடுக்கிறது. ஆகவே சீதா பழத்தை ஒதுக்கி விடமால் அதன் பயன்களை கருத்தில் கொண்டு அதன் சீசனில் தவறாமல்  எடுத்து கொள்வோம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்