நம் அனைவரது வீடுகளிலும் அடிக்கடி சாதம் மிச்சம் ஆகுவது வழக்கம். இந்த சாதத்தை மறுநாள் கஞ்சியாக மட்டுமே பயன்படுத்துகின்றன. மற்றபடி எதற்கும் பெரும்பாலானோர் பயன்படுத்துவதில்லை. ஆனால் மீதமுள்ள சாதத்தை தூக்கி எறியாமல் அவற்றை நாம் பல வகைகளில் உபயோகமான முறையில் பயன்படுத்தலாம்.
சிலர் மீதமுள்ள சாதத்தை வைத்து வடகம் செய்யவும் பயன்படுத்துவர். அந்த வகையில், தற்போது மீதமுள்ள சாதத்தை வைத்து அசத்தலான சுவையான வடை செய்வது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையானவை
செய்முறை
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு மிக்சியில் ஒன்றரை கப் சாதத்தை போட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த கலவையில், தேவையான அளவு உப்பு, நறுக்கிய வெங்காயம், சிறு சிறு துண்டுகளாக வெட்டிய இஞ்சி, பச்சரிசி மாவு, கருவேப்பிலை, கொத்தமல்லி, கேரட் துருவியது, பச்சை மிளகாய், மிளகு ஆகியவற்றை போட்டு கலந்து கொள்ள வேண்டும்.
பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் கொதித்தவுடன் உளுந்து வடைக்கு தயார் செய்து வடை சுடுவது போல கையில் எடுத்து, அந்த மாவில் நடுவில் ஓட்டையை போட்டு எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்க வேண்டும். இப்பொது சுவையான மிருதுவான வடை தயார்.
இவ்வாறு வடை செய்து சாப்பிடுவதன் மூலம் சாதமும் வீணாகாமல், நமக்கு ஸ்நாக்ஸ் சாப்பிட்டது போலும் இருக்கும். இனிமேல் இருந்து இல்லத்தரசிகள் சாதம் மீதமாயிருந்தால் இந்த வழிமுறையை கையாண்டு, அதை பயனுள்ளதாய் மாற்ற கற்றுக் கொள்ளுங்கள்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…