உங்க முகம் கண்ணாடி போல மாற அரிசி மாவே போதும்.!

rice flour (1)

Rice flour-அரிசி மாவை வைத்து நம் முக அழகை அதிகரிப்பது எப்படி என இப்பதிவில் பார்ப்போம்.

அனைவரது இல்லங்களிலுமே மிக எளிமையாக கிடைக்கக் கூடியது அரிசி மாவு. சரும பிரச்சனைகளுக்கு அரிசி மாவு ஒரு நல்ல தீர்வை கொடுக்கிறது. ஜப்பானிய பெண்கள் மற்றும் கொரியர்கள் தங்கள் முக அழகை மேம்படுத்த அரிசி மாவையும், அரிசி மாவால் தயாரிக்கப்பட்ட கிரீம்களையும் பயன்படுத்தி வருகிறார்கள் இதனால் தான் அவர்கள் முகம் பார்ப்பதற்கு பளிச்சென்று கண்ணாடி போல உள்ளது.

சூரிய ஒளியால் ஏற்பட்ட கருமை நீங்க:

அரிசி மாவு 2 ஸ்பூன் ,முல்தானி மட்டி ஒரு ஸ்பூன் ,எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன் இவற்றை கலப்பதற்கு பால் அல்லது தயிரை சேர்த்து பேஸ்ட் போல் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழிவி  வரவும், இவ்வாறு வாரத்திற்கு மூன்று நாட்கள் செய்து வரும் போது சூரிய ஒளியால் ஏற்பட்ட கருமை நீங்கிவிடும்.

முகப்பரு நீங்க:

இரவு தூங்கச் செல்வதற்கு முன் அரிசி மாவு மற்றும் பன்னீரை கலந்து முகப்பரு உள்ள இடத்தில் தடவி இரவு முழுவதும் விட்டு காலையில் முகம் கழுவி வர வேண்டும் .தொடர்ந்து மூன்று நாட்கள் இவ்வாறு செய்யும் போது முகப்பருக்கள் காய்ந்து வடு தெரியாமல் மறைந்து விடும்.

மூக்கில் உள்ள வெள்ளை அரும்புகள் நீங்க:

மூக்கு பகுதியில் எண்ணெய் பசை அதிகமாக சுரக்கும் .இதனால் அங்கு அழுக்கு படிந்து நாளடைவில் அது அரும்புகளாக மாறி குழி ஆகிவிடும். அரிசி மாவு 1 ஸ்பூன், காபி பவுடர் 1 ஸ்பூன், ரோஸ் வாட்டர் அரை ஸ்பூன், கற்றாழை ஜெல் அரை ஸ்பூன் இவற்றை கலந்து அரும்புகள் உள்ள இடத்தில் மட்டும் மசாஜ் செய்யவும். இவ்வாறு செய்தால் வெள்ளை அரும்புகள் வெளியேறிவிடும்.

கருவளையம் நீங்க:

அரிசி மாவுடன் கற்றாழை ஜெல்லை கலந்து கருவளையம் உள்ள இடத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழிவி விட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்யும்போது கருவளையங்கள் மறைந்துவிடும்.

வாரத்திற்கு ஒரு முறை  உங்கள் முகத்திற்கு அரிசி மாவை கொண்டு ஸ்க்ரப்பிங்[scrubbing] செய்ய வேண்டும். இவ்வாறு ஸ்க்ரப்பிங் செய்யும் போது முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும்  இறந்த செல்கள் நீங்கும். முகமும் பார்ப்பதற்கு மென்மையாகவும் பளபளப்பாகவும் காணப்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்