பெண்கள் தங்களது மண நாளை மறவாமல் இருக்க வேண்டியதன் 5 முக்கிய காரணங்கள்..!
பெண்கள் பிறந்த தருணம் முதல் அவர்தம் வளர்ச்சியின் ஒவ்வொரு கால கட்டத்திலும் கேட்டு வளர்ந்த விஷயம் திருமணம் என்பதாகும்; அத்தகைய திருமண வைபவம் நிகழ்ந்த பின், பெண்களின் வாழ்க்கையில் பல முக்கிய மாற்றங்கள் நிகழ்கின்றன.
இந்த பதிப்பில் பெண்கள் தங்கள் மண நாளை மறவாமல் இருக்க வேண்டியதன் 5 முக்கிய காரணங்கள் என்னென்ன என்பதை படித்து அறியலாம்.
காதல்!
காதலித்து மணமுடித்த கணவனுடன் பல நேரங்களில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டாலும், திருமண பந்தத்தில் உங்கள் இருவரையும் இணைத்து வைத்த அந்த திருமண நாளை மறவாமல் காதலுடன் கொண்டாட வேண்டியது மிகவும் அவசியம்.! வருடத்தில் ஒரு நாள் நீங்கள் வெளிப்படுத்தும் காதல், வருடத்தின் மீதம் உள்ள நாட்களை காதலுடன் கடக்க உதவும் என்று உணருங்கள்!
இன்னொரு குடும்பம்!
பிறந்தது ஒரு இடம், புகுந்தது இன்னொரு இடம் என தனது வாழ்வில் இரு வேறு சூழல்களில் வாழ்க்கை நடத்தும் பெண்கள், குடும்பத்தில் எத்தகைய பிரச்சனைகள் நிகழ்ந்தாலும், உங்களுக்கு உறுதுணையாய் இருக்கும் கணவருக்கு நன்றி செலுத்த, இந்த திருமண நாளில் அவசியம் முயல வேண்டும்.
வாரிசுகள்
வாழ்க்கைக்கு பொருள் சேர்த்த வாரிசுகளை நீங்கள் பெற்று, அவர்களை வளர்க்க உங்கள் கணவரும் பங்காற்றி உள்ளார்; அவ்வாறு உங்களுக்கு உதவி புரிந்த கணவரை கௌரவிக்க, உங்கள் திருமண நாளில் ஏதேனும் ஆச்சரிய விஷயங்களை செய்து, கணவரை அசத்தலாம். இதெல்லாம் நிகழ, திருமண நாளை நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டியது மிகவும் பெண்களே!
உழைப்பு!
குடும்பத்தின் முன்னேற்றத்திற்காக, குடும்ப நபர்கள் வசதியுடன் வாழ அயராது உழைக்கும் கணவரை பூஜிக்கும் நாளாக, திருமண நாள் இருக்கலாம்; திருமண நாளன்று கணவர் தங்களுக்கு செய்த நல்ல விஷயங்களை கூறி அவருக்கு காதலுடன் நன்றி செலுத்துங்கள்! மேலும் கணவரிடம் நீங்கள் கொண்டிருக்கும் குறைகளை வெளிப்படுத்தி, அவற்றை சரிசெய்ய முயலுங்கள்.