பெரும்பாலான ஆண்கள் தனது திருமண நாளை நினைவில் வைத்து கொள்வதில்லை; ஆண்களின் இந்த ஒரு நியாபக மறதியால், தம்பதியரின் மகிழ்ச்சியான திருமண வாழ்வில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. ஆண்கள் தங்கள் திருமண நாளை மறப்பதால், பிரச்சனைகள் ஒரு பக்கம் ஏற்பட்டாலும் தங்கள் மனைவியின் மனநிலை பாதிக்கப்படுவதை அறிவதில்லை.
இந்த பதிப்பில் ஆண்கள் தங்கள் திருமண நாளை மறக்கக் கூடாததற்கான முக்கிய காரணங்களை பற்றி பார்க்கலாம்.
காதல்!
பல பெண்கள் இருக்கும் இந்த உலகில், அந்த ஒரு குறிப்பிட்ட பெண்ணை தேர்வு செய்து திருமணம் செய்துள்ளீர்கள்; திருமணத்திற்கு முன் அல்லது திருமணத்திற்கு பின் என ஏதாவது ஒரு சமயத்தில் உங்கள் மனைவியின் மீது காதல் ஏற்பட்டிருக்கும். காதல் ஏற்படாமல் திருமண உறவில் நீங்கள் இருவரும் நுழைந்திருக்க முடியாது.
ஆகையால் நீங்கள் இருவரும் இணைந்து, உங்கள் காதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்ற இந்த திருமண நாளை மறவாது கொண்டாட வேண்டியது அவசியமல்லவா!
புது குடும்பம்!
வேறு ஒரு இடத்தில் பிறந்து, உங்கள் வீட்டிற்கு வந்து புதிய சூழல், புதிய உறவுகள், புதிய குடும்பத்தை ஏற்று வாழும் உங்களது மனைவியை சிறப்பிக்க நீங்கள் எதுவும் செய்வதில்லை; குறைந்த பட்சம் இந்த திருமண நாளில் ஆவது, உங்கள் மனைவியை கொண்டாடலாமே!
குழந்தைகள்
உங்கள் வாழ்விற்கு அர்த்தம் அளிக்க குழந்தைகள் எனும் மிகப்பெரிய பரிசை அளித்த உங்கள் மனைவியை பூஜிக்க, திருமண நாளை பயன்படுத்தி கொள்ளலாம். அதற்கு நீங்கள் திருமண நாளை மறவாமல் இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
நிர்வாகம்..!
பிறந்த வீட்டில் செல்லமாக வளர்ந்த உங்கள் மனைவி திருமணம் ஆன பின், உங்கள் மனைவியர் திருமணமானபின் சிரத்தையோடு வீட்டு நிர்வாகம், பண மேலாண்மை, குடும்பத்தார் நலம் என அனைத்தையும் கருத்தில் கொண்டு செயல்படுகின்றனர்.
உங்கள் திருமண நாளை, அவர்கள் செய்யும் சேவைக்கு ஒரு பாராட்டு விழாவை நடத்திடலாம்; இந்த விழா நடைபெற ஆண்களே! தாங்கள் தமது திருமண நாளை நினைவில் நிறுத்த வேண்டியது அவசியம்.
விடுமுறை
விடுமுறையின்றி எல்லா நாட்களும் உழைக்கும் உங்கள் மனைவியை கௌரவிக்க, திருமண நாளை உபயோகிங்கள் ஆண்களே! உங்களின் திருமண நாளன்று, மனைவியால் நீங்கள் அடைந்த விஷயங்களை அவர்களிடம் காதலுடன் எடுத்துரைத்து, அவர்களை கௌரவியுங்கள்.!
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…