கணவன் மனைவி உறவு வலுவடைய என்ன செய்யலாம்

Default Image

எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து திருமணம் எனும் பந்தத்தில் இணைவது இயற்கை.திருமணம் எனும் பந்தத்தில் தான் கணவன் மனைவி உறவு வலுப்படுகிறது.உலகத்தில் உள்ள உறவுகளில் கணவன் மனைவி எனும் உறவு புனிதமான உறவாகும்.உறவை வலுவடைய என்னென்ன செய்யலாம் என்பதை கீழே பார்க்கலாம்.

உறவு எவ்வாறு இருக்க வேண்டும்:

 

கணவன் மனைவியின் பாசம் இவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்காக தான் நம் முன்னோர்கள் கல்யாணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்பதை சொல்லி வைத்தார்கள். உண்மையான பாசம் வைத்திருக்கும் கணவன் மனைவியால் ஒரு நிமிடம் கூட கணவனை மனைவியும் மனைவியை  கணவரும் பிரிந்திருக்க முடியாது.பின்வரும் கவிதை மூலம் கணவன் மனைவி உறவை பற்றி தெளிவாக எடுத்துரைக்கும்.

”நீங்க இறப்பதற்கு ஒரு நொடிக்கு முன்
நான் கண் மூடிட வேண்டும்” என
கூறும் மனைவியின் பாசமும்,

”நான் இறந்த அடுத்த நொடி நீயும்
என்னுடன் வந்துவிடு” என கூறும்
கணவனின் பாசமும் வேறு எந்த
பாசத்திற்கும் ஈடாகாது.

விட்டு கொடுக்கும் பண்பு உறவின் சிறப்பு:

 

கணவன் மனைவியின் உறவில் மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும்  விஷயங்களில் விட்டு கொடுக்கும் தன்மை இல்லாததும் ஒரு முக்கிய காரணமாகும்.

ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து போவதால்  குடும்பத்தில் பல பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம். மேலும் தவறை ஏற்று கொள்ளும் மனப்பக்குவமும் நம்மிடம் இருந்தால் குடும்பத்தில் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பில்லை.

பரஸ்பர புரிதல் :

 

கணவன் மனைவிக்கு பரஸ்பர புரிதல் இருந்தால் அவர்களை யாராலும் அவர்களின் உறவில் விரிசலை ஏற்படுத்த முடியாது. மேலும் எப்போதும் ஒருவரை ஒருவர் அன்பு செய்ய வேண்டும்.மேலும் கணவன் ,மனைவி எந்த விஷயங்களையும் மறைக்காமல் மனம் விட்டு பேச வேண்டும்.

கணவன்,மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டாலும் அடுத்தவர்களின் காதிற்கு எட்டாமல் பார்த்து கொள்ள வேண்டும். சில நபர்கள் கணவன் மனைவியை எவ்வாறு பிரிக்கலாம் என காத்து கொண்டிருப்பார்கள். மேலும் கணவன் ,மனைவி தங்களுடைய குடும்ப விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள கூடாது.அது நம்முடைய வாழ்வில் பெரும் சிக்கலை ஏற்படுத்தும்.

எனவே நாம் இத்தகைய விஷயங்களை கருத்தில் கொண்டு வாழ்ந்தால் நம் வாழ்க்கையில் எந்த விதமான பிரச்சனைகளும் ஏற்படாது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்