உலகை நீங்கள் விரும்பும் விதத்தில் மாற்ற என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

Default Image

ஒவ்வொருவருக்கும் வாழ்வில் தனக்கு பிடித்த வகையில் எல்லா விஷயங்களும் அமைய வேண்டும் என்ற ஆசை, எதிர்பார்ப்பு இருக்கும்; அந்த ஆசை என்பது பெரும்பாலான தருணங்களில் நிறைவேறாத ஆசையாகவே இருக்கும். உங்களால் ஒட்டுமொத்த உலகை மாற்ற இயலாமல் இருக்கலாம்; ஆனால் உங்கள் உலகத்தை மற்றும் உங்களை சுற்றியுள்ளவர்களின் உலகத்தை அழகாக, அர்த்தமுள்ளதாக மாற்ற இயலும்.

அவ்வகையில் உமது வாழ்க்கை உலகை நீங்கள் விரும்பும் விதத்தில் மாற்ற என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இந்த பதிப்பில் பார்க்கலாம்.

நிகழாதை நிகழ்த்துங்கள்

நீங்கள் இருக்கும் இடத்தில் அல்லது உங்களை சுற்றி இருக்கும் சுற்றுப்புறத்தில் பல காலமாக மாற்ற வேண்டும் என நீங்கள்/உங்கள் பகுதி மக்கள் செய்ய நினைத்து வந்த விஷயத்தை நிகழ்த்துங்கள்; இது வீட்டை சுத்தம் செய்வதாக இருக்கலாம் அல்லது சுற்றுப்புற இடத்தில் காணப்படும் குப்பையை சுத்தம் செய்வதாக இருக்கலாம்.

சுற்றுப்புறத்தை சுத்தம் செய்ய நீங்கள் முன்வந்தால் நிச்சயம் உங்களை பார்த்து மற்றவர் உங்களுடன் வந்து இணைவர்; உலகத்தை மாற்ற உங்களின் முதல் அடியை இது போன்ற விஷயங்களின் வாயிலாக எடுத்து வையுங்கள்.

பேசுங்கள்

உலகம் புதிதாய் மாற, நீங்கள் புதிய மனிதராய் மாற வேண்டியது மிகவும் அவசியம்; இதுவரை நீங்கள் பார்த்து பழகிடாத மனிதர்களுடன் நட்புணர்வுடன் பேசி பழக முயலுங்கள்.

நான், என் குடும்பம், என் உறவு என்ற கூண்டை விட்டு வெளிவந்து பூமி சுமந்து கொண்டிருக்கும் மற்ற மனிதர்களுடன் பந்தத்தை ஏற்படுத்த முயலுங்கள்.

உதவிக்கரம்

கஷ்டப்படும் அல்லது உதவி தேவைப்படும் நபரை சந்திக்க நேர்ந்தால் உடன் சென்று உங்களால் இயன்ற உதவியை செய்யுங்கள். வயதானவர், பார்வையற்றோர் போன்றோருக்கு உங்களால் இயன்ற உதவியை, முடிந்த சந்தர்ப்பத்தில் ஆற்றுங்கள்.

மேலும் அனாதை இல்லங்களில் ஆதரவற்று இருக்கும் குழந்தைகள் மற்றும் முதியவர்களுடன் பேசி பழக – அவர்களை மகிழ்ச்சிப்படுத்த முயலுங்கள்; அவர்களுக்கு உங்களால் முயன்ற உதவியை ஆற்றுங்கள்.

திறமையை காட்டுங்கள்

உங்களிடம் பொதிந்திருக்கும் அற்புத திறமையை இந்த உலகத்தின் முன் நிகழ்த்திக்காட்டி, பாராட்டுக்களை பெற முயற்சியுங்கள்; மற்றவரிடம் இருந்து பெரும் பாராட்டு தான் மனிதரை அதிகம் ஊக்குவிக்கும் பெரும் ஊக்குசக்தி ஆகும்.

பிடித்ததை செய்யுங்கள்

வாழப்போவதோ ஒரே ஒரு வாழ்க்கை; ஆகையால் உங்கள் மனத்தில் தோன்றும் எண்ணங்கள், உங்கள் ஆசைகள் என அனைத்தையும் நிஜத்தில் நிகழ்த்த முயலுங்கள்; உங்கள் எண்ணங்களும் ஆசைகளும் மற்றவரை கஷ்டப்படுத்தாதவரை நீங்கள் விரும்பியதை விரும்பிய நேரத்தில் செய்து மகிழலாம்.

மாற்றம் – நிரந்தரம்

மாற்றம் ஒன்று தான் மாறாதது – உங்கள் வாயிலாக உலகத்தின் மாற்றமும் நிகழும் என்று நம்பிக்கை கொள்ளுங்கள்.

இவ்வாறு சிறு சிறு விஷயங்களை மாற்றுதல், பெரிய விஷயங்களின் மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதை நினைவில் நிறுத்துங்கள்; நம்பிக்கையுடன் செயலாற்றுங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்