பக்கத்து வீட்டுக்காரர்களால் ஏற்படும் சகிக்க இயலாத தொந்தரவுகள் என்னென்ன தெரியுமா?

Default Image

உறவுகளால், நண்பர்களால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் மற்றும் தொந்தரவுகளை காட்டிலும், பக்கத்து வீட்டுக்காரர்களால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளும் தொந்தரவுகளும் பல. சில சமயங்களில் பக்கத்து வீட்டினரால் ஏற்படும் தொந்தரவலாக்கள் எல்லையை கடப்பதும் உண்டு.

இந்த பதிப்பில் பக்கத்து வீட்டுக்காரர்களால் ஏற்படும் சகிக்க இயலாத தொந்தரவுகள் என்னென்ன என்று பார்க்கலாம் வாருங்கள்!

பிரச்சனைகளுக்கு பஞ்சமில்லை

Hispanic referee between arguing neighbors

பக்கத்து வீட்டுக்காரர்கள் கிருத்தரம் பிடித்தவர்களாய் அமைந்து விட்டால் அவ்வளவு தான், எதற்கெடுத்தாலும் பிரச்சனை செய்ய தொடங்கி நம் மன நிம்மதியை குலைத்து, நிம்மதி என்ற ஒன்றே நம் வாழ்வில் இல்லாமல் போக செய்துவிடுவர்.

பக்கத்து வீட்டினரின் பாசம்

நம் நண்பர்களின் பக்கத்து வீட்டுக்காரர்கள் நட்புறவோடு, பழகி பாசம் காட்டுவதை பார்க்கும் பொழுது, நமக்கு அமைந்திருக்கும் மோசமான குணாதிசயம் கொண்ட பக்கத்து வீட்டுக்காரர்களின் நினைவு தோன்றும்; அச்சமயம் நல்ல மனிதர்களை அக்கம் பக்கத்தவராக கொண்ட அதிர்ஷ்டசாலியான நண்பர் மீது லேசாக பொறாமை கூட ஏற்படும்.

குடும்பத்தில் குழப்பம்

உங்கள் குடும்ப விஷயங்களில், பக்கத்து வீட்டுக்காரர்கள் தலையிட்டு பேசுவதை பொறுக்க இயலாத அளவிற்கு கோபம் வரும்; இதை மட்டும் எந்த குடும்ப தலைவி மற்றும் தலைவனாலும் சகித்து கொள்ளவே இயலாது.

ஆனால், பெரும்பாலான நேரங்களில் அவ்வாறு பக்கத்து வீட்டுக்காரர்கள் தலையிட்டு கருத்து கூறுவதையும் தடுக்க இயலாத இருப்போம்; இதற்கு யாரை நொந்து கொள்வது?

அவசரம் புரியாது!

சில சமயங்களில் நாம் அவசரமாக வெளியே செல்ல கிளம்பிக்கொண்டு இருக்கையில், எரிச்சல் ஊட்டும் வண்ணம் பக்கத்து வீட்டார் பேசிக்கொண்டிருக்கையில் நமக்கு ஏற்படும் எரிச்சல் மற்றும் கோபத்திற்கு அளவே இருக்காது.

தேவையற்ற அறிவுரை!

சமையல், இல்லறம், குழந்தை வளர்ப்பு, நிர்வாகம் என அவர்களுக்கு தேவையில்லாத விஷயங்களில் எல்லாம் தெரிந்தவர் போல் வந்து அறிவுரை கூறி கொண்டிருக்கும் பக்கத்து வீட்டாரின் மேல் வரும் கோபத்தை காட்டவும் முடியாது; அவர்களின் செயலை பொறுத்துக்கொள்ளவும் முடியாது.

என்ன நண்பர்களே! படிப்பில் படித்த விஷயங்கள் உண்மைதானே! உங்களை போன்றே பாடுபடும் நண்பர்களுடன் இந்த பதிப்பினை பகிருங்கள்.!

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்