பெற்றோர்களே! உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவரா நீங்கள்? அப்ப உங்களுக்காக தான் இந்த பதிவு!
குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை உள்ள பெற்றோருக்கு சூப்பர் டிப்ஸ்.
பொதுவாக பெற்றோர்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதுண்டு. குழந்தைகளின் ஆரோக்கியத்தில் ஏதேனும் குறைப்பாடு இருப்பின் அதற்க்கு காரணம் சுத்தமின்மை தான். பிறந்த குழந்தை முதல் வளரும் நிலையில் உள்ள குழந்தைகள் வரை எளிதில் நோய்தொற்றுகளுக்கு ஆளாகி விடுவதால், பெற்றோர்கள் சில ஆரோக்கிய விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
கை கழுவுதல்
குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் பட்சத்தில், எளிதில் நோய்வாய் படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே, அவர்களுக்கு கை கழுவும் பழக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டும்.
செல்லப்பிராணிகள்
நாம் நமது வீடுகளில் செல்லப்பிராணிகளை விரும்பி வளர்ப்பதுண்டு. அனால், இந்த செல்ல பிராணிகள் நமது வீட்டில் உள்ள செல்ல குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தாகி விடக் கூடாது. எனவே செல்ல பிராணிகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், தகுந்த பாதுகாப்பு மற்றும் தடுப்பூசிகளை செல்லப்பிராணிகளுக்கு அளிக்க வேண்டும்.
உபகரணங்கள்
நாம் குழந்தைகளுக்கு உணவு ஊட்ட மற்றும் மற்ற காரியங்களுக்காக பயன்படுத்தக் கூடிய உபகாரணங்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.