முதலிரவு – உடலுறவு போன்ற விஷயங்களுக்கு இரவு உகந்த நேரமாக கருதப்படுவது ஏன்?

Default Image

காலங்காலமாகவே திருமணம் முடிந்த தம்பதியர் முதன் முதலில் ஒன்றாக சங்கமிக்கும் சடங்கான முதலிரவு என்பது இரவில் தான் நடத்தப்பட்டு வருகிறது; இரவில் தான் தம்பதியர் ஒன்றிணைந்து தங்கள் தாம்பத்தியத்தை தொடங்க வேண்டும் என்ற வழக்கம் நம் முன்னோர் காலத்தில் இருந்தே தொடங்கி தொடர்ந்து வருகிறது. இதையே தான் அறிவியலும் கூறுகிறது.

முதலிரவு – உடலுறவு போன்ற விஷயங்களுக்கு இரவு உகந்த நேரமாக கருதப்படுவது ஏன் என்ற உண்மை குறித்து இந்த பதிப்பில் படித்து அறியலாம்.

நேரம் அவசியமா?

தம்பதியர் தாங்கள் எப்பொழுது விரும்பினாலும், தங்களுக்குள் காதல் அதிகரித்து இணைய விரும்பும் நேரத்திலெல்லாம் ஒன்று கூடி சங்கமிக்கலாம்.

ஆனால், இரவில் தம்பதியர்கள் சங்கமித்தால் பல உடல் உறுப்புகள் சார்ந்த நன்மைகள் மற்றும் மனதளவிலான அமைதியை பெற இயலும் என சமீபத்திய ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.

என்ன ஆய்வு?

சமீபத்தில் 470 தம்பதியரை அழைத்து, அவர்களை தினசரி – வேறு வேறு நேரங்களில் உடலுறவு கொள்ளச்செய்து அவர்களின் உடல் மற்றும் மனதளவில் என்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதை சில அறிவியலாளர்கள் ஆய்வு செய்தனர்.

ஆய்வு முடிவு!

நடத்தப்பட்ட இந்த ஆய்வினில் தம்பதியர்கள் அறிவியலாளர்களின் கருத்துப்படி வேறுபட்ட நேரங்களில் உடலுறவு கொண்டனர்; ஆய்வின் முடிவாக இரவில் உறவு கொண்ட தம்பதியர் எப்பிரச்சனையும் இன்றி, உறவை முடித்து படுத்த உடன் தானாகவே தூக்கம் ஏற்பட்டது என்றும், அப்படி ஏற்பட்ட தூக்கம் தடையில்லா தூக்கமாக விளங்கியதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இரவில் உறவு கொண்ட நபர்கள் அடுத்த நாள் அதிக புத்துணர்வுடன், மனமகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதுவே மற்ற நேரங்களில் உறவு கொண்டவர்கள் எவரும் குறிப்பிடத்தகுந்த நன்மைகளை பெறவில்லை என்று கூறப்படுகிறது.

இரவே நல்லது!

ஆகையால் உறவு கொள்ள இரவு நேரம் உகந்தது என்று அந்த நாளில் இருந்து இந்த நாள் வரை நம்பப்படுவது, அறிவியல் ரீதியாகவும் உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனவே தினமும் இரவு தூங்கும் முன் உறவு கொள்ளுங்கள்; இவ்வாறு உறவு கொள்வது அந்த குறிப்பிட்ட நேரத்திலாவது உங்களை டிஜிட்டல் – மின்னனு சாதனங்களிலிருந்து விலக்கி வைத்து, உங்கள் ஆரோக்கியத்தை காக்க உதவும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi