காதலர்கள் தினத்தில் இந்த 5 இரகசிய பரிசுகளை கொடுத்தால், காதல் உடனே ஒர்க் அவுட் ஆகும்..!

Default Image

காதலர்கள் தினம் என்றாலே வண்ணமயமான எண்ணங்கள் தான். காதலை போலவே காதலர் தினமும் பல வித அர்த்தங்களை நமக்கு தருகின்றன. காதலர் தினத்தில் காதல் செய்யும் இருமனமும் நிச்சயம் துள்ளலுடன் இருக்கும். என்ன செய்கிறோம், ஏது செய்கிறோம் என்கிற எண்ணம் காதலர்களுக்கு காதலில் மிதக்கும் போது தோன்றுவதில்லை.

இப்படி காதல் செய்யும் காதலர்களுக்கு மிக சிறந்த தினமாக இந்த காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் காதலர்களை கவரும் படி செய்தால் காதல் இன்னும் வலு பெறும். குறிப்பாக காதலர்கள் காதலிக்கு என்ன செய்தால் பிடிக்கும் என்றும், காதலிகள் காதலருக்கு என்ன செய்தால் விரும்புவார் என்பதையும் அறிந்து கொள்வோம்.

இரகசிய பரிசுகள்
காதலில் இருப்பவர்கள்அவ்வப்போது சிறு சிறு பரிசு பரிமாற்றம் இருந்தால் சுவாரசியமான முறையில் அந்த உறவு செல்லும். இதுவே குறிப்பு எழுதி வைத்து அந்த பரிசுகளை அவரையே கண்டுபிடிக்கும் படி செய்தால் மிக மிக சுவாரசியமாக இருக்கும். இப்படிப்பட்ட இரகசியங்களை பெண்கள் பெரும்பாலும் விரும்புவார்கள்.

கேண்டில் லைட் டின்னர்
இப்போது பலருக்கும் இப்படிப்பட்ட டின்னர் மிகவும் பிடித்து விட்டது. அதாவது, யாரும் இல்லாத இடத்தில் வெறும் மெழுகுவர்த்திகளை மட்டும் ஏற்றி வைத்து ரொமான்டிக் மூடில் தனது காதலியுடன் காதலர் தினத்தை கொண்டாடினால் இதை விட பெரிய பரிசு எதுவும் இருக்காது.

வீடியோ
உங்களது காதலர் அல்லது காதலியின் சின்ன வயது முதல் இது வரை எடுத்த புகைப்படங்களை ஒரு தொகுப்பாக எடுத்து அதை வீடியோ போன்று தயாரித்து, அவருக்கு சர்பிரைஸாக போட்டு காட்டினால் மிக பிரமாதமாக இருக்கும். யாராக இருந்தாலும் இப்படி ஒரு பரிசை எதிர்பார்க்கவே மாட்டார்கள்.

சமையல்
இது கூட ஒரு புதுவித பரிசாகவும், ஆச்சரியமாகவும் இருக்கும். உங்களுக்கு பிடித்தவர்களுக்கு எது பிடிக்குமோ அதை சமைத்து பரிமாறினால் அதை விட அற்புதமான பரிசு எதுவும் கிடையாது. மேலும் காதலுடன் அவருக்கு ஊட்டிவிட்டால் மிக சிறப்பாக இருக்கும்.

கடிதம்
காதலுக்கு மிக பெரிய பங்கு இந்த தூதாக இருக்க கூடிய காதல் கடிதம் தான். காதலர் தினத்தில் உங்களால் எதையுமே கொடுக்க முடியவில்லை என நினைக்காதீர்கள். இவை எல்லாவற்றையும் காட்டிலும் காதலர் தினத்தின் சிறப்பு பரிசாக உள்ள காதல் கடித்தை உங்கள் மனம் விரும்பியவருக்கு கொடுங்கள். இது தான் காதலர் தினத்தின் மேலோங்கிய பரிசாக இருக்க முடியும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்