திருமண உறவில் ஏற்படும் எல்லா பிரச்சனைகளையும் போக்க இந்த ஒரு வார்த்தை போதுமாம்!
புவியில் மனிதராய் பிறந்த எல்லோரின் வாழ்விலும் முக்கியமான கட்டமாக திகழ்வது திருமணம் எனும் விஷயமாகும்; பலரின் வாழ்வு மாறிப்போவது இந்த ஒரு தருணத்தில் தான். திருமணம் எனும் பந்தத்தில் இணையும் ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் வாழ்க்கை முழுதும் துணையாய் இருந்து, வாழ்ந்து வாழ்வில் நிறைவு பெறுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு விஷயம் இது.
இத்திருமண உறவில் ஏற்படும் எல்லா பிரச்சனைகளையும் போக்க உதவும் ஒரு எளிய வழி பற்றி இங்கு படித்து அறியலாம்.
திருமண உறவு
திருமண உறவில் இணையும் இரு நபர்களுக்குள்ளாகவும், அவர்தம் வாழ்விலும் பல தருணங்களில் பிரச்சனைகளும் – சண்டை சச்சரவுகளும் ஏற்படுவதுண்டு. இம்மாதிரியான சந்தர்ப்பங்களை சமாளிக்கும் வழி தெரியாமல் பல தம்பதியர் குடும்பத்தினரின் உதவியை நாடி அவர்களின் நிம்மதியை சண்டையிட்டுக் குலைப்பதுண்டு.
பல தம்பதியர்கள் சண்டையிட்டு சண்டையிட்டு சோர்வடைந்து, மொத்தமாக பிரிந்து விடும் முடிவெடுத்து விவாகரத்து செய்து கொள்கின்றனர்.
தீர்வு என்ன?
தம்பதியரிடையே ஏற்படும் எல்லா பிரச்சனைகளையும் போக்க ஒரு எளிய வழி உண்டு; ஒரே ஒரு வார்த்தையை கூறினால் போதும் உறவில் ஏற்படும் எப்படிப்பட்ட பிரச்சனையையும் எளிதில் தீர்த்து விடலாம்.
அப்படிப்பட்ட தீர்வு என்ன தெரியுமா? அந்த ஒரு வார்த்தை என்ன தெரியுமா? அது “நாம்” எனும் தாரக மந்திரம்- சாதாரண வார்த்தை தான்.
ஆய்வும் முடிவும்
5000-திற்கும் மேலான தம்பதியரை அவர்களின் அன்றாட செயல்பாடுகளின் பொழுது, பேசும் பொழுது, மற்றவரிடம் தங்களை பற்றி கூறும் பொழுது என எல்லா தருணங்களிலும் “நாம்” – “நாங்கள்” பயன்படுத்துமாறு அறிஞர்கள் அறிவுறுத்தினர்.
அதன்படி தம்பதியரும் 48 நாட்கள் நடந்து கொண்டனர்; அதன் பிறகு தங்களுக்குள் கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள் குறைந்துள்ளதாக எல்லா தம்பதியினருமே தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
எப்படி பயன்படுத்துவது?
இந்த எளிய – மாய வார்த்தையை உங்கள் உறவில் வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம், வாய்ப்பு கிடைக்கும் இடங்களில், நேரங்களில் எல்லாம் நாம் என உபயோகித்து வாருங்கள்; இப்படி பயன்படுத்துகையில் அது நிச்சயம் உங்கள் உறவில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.
என்ன வித மாற்றம்?
இவ்வாறு நாம் என குறிப்பிட்டு பேசுவது, உங்கள் துணையை நீங்கள் மதிப்பதை, அவருக்கு நீங்கள் அளிக்கும் முக்கியத்துவத்தை காட்டும்; துணைக்கு அவரின் முக்கியத்துவத்தை உணர்ந்து விட்டாலே போதும்.
தம்பதியருக்குள் இருக்கும் சண்டைகள் குறைந்து, நெருக்கம் அதிகரிக்கும்; காதல் பிணைப்பு பலமாகும். இதை முயற்சித்து பாருங்கள், மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்!