இன்றைய காதலர் தின மாலை மற்றும் இரவுப்பொழுதை, அதிக செலவில்லாமல் கொண்டாடுவது எப்படி?
காதலர் தினம் என்றாலே காதலிக்கும் நபர்கள் எத்துணை மடங்கு மகிழ்ச்சியடைகிறார்களோ, அதே அளவு கவலையும் அடைவார்கள்; காதலிக்கும் நபர்களில் ஆண்கள் மனம் தான் கவலை என்ற ஒன்றை அடையும், பெண்களின் இதயம் மகிழ்ச்சி என்ற உணர்வை மட்டுமே கொண்டிருக்கும்.
ஏனெனில் தன் காதலைக்காக காசை கரியாக்கி, அவளை மகிழ்விக்க அதிகம் முயல்வது ஆண்கள் தான்; இன்றைய காலத்தில் சில பெண்களும் இது போல் காதலனுக்காக செய்து வந்தாலும், அப்படிப்பட்ட பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு தான். இந்த பதிப்பில் இன்றைய காதலர் தின இரவை, அதிக செலவில்லாமல் கழிப்பது எப்படி என்பதை பற்றி படித்து அறியலாம்.
பிடித்த இடங்கள்
பயணம் செய்வதை விரும்பும் ஜோடியர் அல்லது உங்கள் துணை பயணத்தை விரும்புபவராக இருந்தால், காதலர் தின மாலைப்பொழுதை பிடித்த இடங்களுக்கு சென்று, அங்கு நேரம் செலவழித்து மகிழலாம்.
மேலும் இந்த நாளில் உங்கள் துணை அதிக நாட்களாக பார்க்க விரும்பும் இடத்திற்கு, அவரை ஆச்சரியப்படுத்தும் வகையில் அழைத்துச் சென்று துணையை மகிழ்விக்க முயலலாம்.
பிடித்த நபர்கள்
காதலர் தினத்தில் தங்கள் காதலி/காதலன் பல நாட்களாக பார்க்க விரும்பும் நபர்களை சந்திக்க அழைத்துச் சென்று அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கலாம். உதாரணத்திற்கு உங்கள் காதலி நடிகர் விஜய் ரசிகையாக இருந்தால், அவரை எப்படியாவது சந்திக்க ஏற்பாடு செய்து காதலியை அழைத்துச் சென்று அவரை மகிழ்விக்கலாம்.
வீட்டிற்கு கூட்டிச்செல்லல்!
துணையை காதலர் தின பொன்னாளில் வீட்டிற்கு அழைத்துச் சென்று, அவரை அறிமுகப்படுத்தி உங்கள் குடும்பத்தை அவர்களுடையதாக உணரச் செய்தால், அது தரும் சுகமே தனி!
இதை நிச்சயம் முயற்சித்து பாருங்கள் நண்பர்களே! இது உங்கள் வீட்டு நபர்கள் நட்புணர்வான மனப்பக்குவம் கொண்டிருந்தால் மட்டுமே முடியும்.
உணவு மற்றும் சினிமா!
துணையை காதலர் தினத்தை கொண்டாட வீட்டிற்கு அழைத்து சென்று அவருக்கு பிடித்த படம் பார்க்க வைத்து, அவருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுதல் மற்றும் இருவரும் தங்களுக்கு பிடித்த உணவுகளை சேர்ந்து சமைத்து மனநிறைவுடன் நேரத்தை செலவிடலாம்.
கடற்கரை காதல்!
கடற்கரைக்கு துணையுடன் சென்று அங்கு நேரம் செலவிடுதல், பேசி மகிழ்தல், கடற்கரையில் விளையாடுதல், கடற்கரையோரமாக கால்கள் மணலில் புதைய நடந்து மனம் திறந்து உரையடி காதலை பகிர்ந்து கொள்ளுதல் போன்ற செயல்களை புரியலாம்.
நீண்ட ரைட்.!
காதலர் தினத்தை தனிமையில் – பயணம் வாயிலாக கொண்டாட நீங்களும் உங்கள் துணையும் விரும்பினால், இருசக்கர அல்லது நான்கு சக்கர வாகனத்தில் ஆள் அரவம் இல்லாத, நெரிசல் இல்லாத பகுதியில் ஒரு நீண்ட பயணம் மேற்கொள்ளலாம்; பயணத்தின் பொழுது மனம் விட்டு பேசி காதலை வெளிப்படுத்தலாம்.
பைத்தியக்காரத்தனமான செயல்கள்
நீங்களும் உங்கள் துணையும் வெகு காலமாக செய்ய விரும்பும் பைத்தியக்காரத்தனமான செயல்கள் ஏதேனும் இருந்தால் அவற்றை செய்து, பயங்கர சந்தோசத்தை அடையலாம்.
ஆச்சரிய பரிசு அவசியம்!
இச்செயல்களில் எந்த ஒன்றை நீங்கள் புரிய நிச்சயித்தாலும், அதனை செய்கையில் ஒரு சில ஆச்சரிய பரிசுகளையும் சேர்த்து செய்யுங்கள்; இந்த ஆச்சரிய செயல்கள் என்பது ஒரு காதல் கவிதையை சுயமாக கூறுவது, பூங்கொத்து அளிப்பது, துணையை பற்றிய காணொளியை பரிசளிப்பது என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
இவ்வகையில் ஆச்சரிய பரிசுகள் அளிப்பது, உங்கள் துணையை மேலும் சிறப்பாக உணர வைக்கும்; அவர் உங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்ற விஷயத்தை, உங்களது இச்செயல்கள் அவருக்கு உணர்த்தும்.
தெய்வீக அன்பு உருவாகும்!
இவ்வாறு மேற்கூறிய செயல்களை செய்வது, துணையின் விருப்பங்கள் மேல் நீங்கள் கொண்டுள்ள மதிப்பை காட்டும்; அதோடு அதை நிறைவேற்ற நீங்கள் எவ்வளவு முயற்சிக்கின்றீர்கள் என்ற மெனக்கெடலையும் துணைக்கு புரிய வைக்கும்.
மொத்தத்தில் இந்த செயல்கள் அனைத்தும் உங்கள் துணையின் இதயத்தில் உங்களுக்கான தெய்வீக அன்பை உருவாக்க பெரிதும் உதவும்.