ஒவ்வொரு பெண்ணும் தனது மாமியாரிடம் கூற விரும்பும் 5 விஷயங்கள் என்ன என்று தெரியுமா?

Default Image

கல்யாணமாகி புதிதாய் வாழ்க்கையை தொடங்கும் ஒவ்வொரு பெண்ணும் தனது புகுந்த வீட்டினரிடம் சில விஷயங்களை எதிர்பார்ப்பர். புகுந்த வீட்டினர் தன்னை அவர்கள் வீட்டு நபராய் கருதி, பாசம் காட்ட வேண்டும் என்பதே ஒவ்வொரு பெண்ணும் கொண்டிருக்கும் குறைந்த பட்ச எதிர்பார்ப்பு ஆகும்.

அதிலும் முக்கியமாக ஒவ்வொரு பெண்ணும் திருமணமாகி புகுந்த இல்லத்திற்குள் நுழைந்த பின், அங்கு ராணியாக இருக்கும் மாமியாரிடம் சில அடிப்படை விஷயங்களை எதிர்பார்ப்பர்; மாமியாரிடம் சில விஷயங்களை எதிர்பார்ப்பர். அவ்விஷயங்கள் என்னென்ன என்று இந்த பதிப்பில் படித்து அறியலாம்.

என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்!

630-06721939
© Masterfile Royalty-Free
Model Release: Yes
Property Release: No
Women holding an oil lamp and smiling

இந்த உலகில் எந்த மனிதரும் குறைகளில்லாத நிறைகள் மட்டும் நிறைந்தவராய் இருப்பதல்ல. ஆகையால் ‘அன்பு அத்தையே! என்னிடமும் சில குறைகள் இருக்கலாம்; அதை பெரிதுபடுத்தி பேசி என் மனதை காயப்படுத்தாமல், என் குறைகளை நிறைகளாக்கும் வழிகளை எனக்கு கற்றுக்கொடுங்கள். என்னையும் உங்கள் மகளாய் ஏற்றுக்கொள்ளுங்கள்!’ எனும் கருத்து ஒவ்வொரு பெண்ணும் தனது மாமியாரிடம் கூற விரும்புவதாகும்.

சண்டை..

நமக்குள் சண்டை என்பது ஏதேனும் ஒரு காலகட்டத்தில் ஏற்படலாம்; ஆனால் அதை உற்றார், உறவினர் என அனைவரிடமும் கூறி, பலரும் நம் உறவுக்குள் விரிசலை ஏற்படுத்தும் வாய்ப்பு தராமல், நாமே பேசி நம்முடைய பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள முயல்வோம்!

புரிதல்

‘அன்பு மாமியே! என் மீது தாங்கள் பாசம் காட்டவில்லை எனினும் என்னை புரிந்து கொள்ள முயலுங்கள். புரிதல் எனும் விஷயம் நமக்குள் இருந்தால், அங்கு சண்டை சச்சரவுகள் நிகழும் வாய்ப்பு குறையும்.’ – மருமகளின் ஏக்கம்!

வீட்டின் அதிகாரம்!

‘வீட்டின் ராணி நீங்கள் தான்; நான் புதிதாய் வந்த இளவரசியே! தங்கள் அறிவுரைப்படி வீட்டை எப்படி நிர்வாகம் செய்வது என கற்றுக்கொண்டு, செயல்படுவதே எனது விருப்பம்’ என்பதை மருமகளாக இருக்கும் பல பெண்களும் தங்கள் மாமியாரிடம் கூற விரும்புகின்றனர்.

எனதும் தமதே!

திருமணமாகி நான் உடன் கொண்டு வந்த அனைத்தும் தங்களுக்கும் சொந்தமானதே! அதை உணர முயலுங்கள். அப்படி உணர்ந்து விட்டால், அங்கு ஏட்டிக்கு போட்டி எனும் நிலை உருவாக வாய்ப்பு இராது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்