இளமை ஒரு மோசமான பருவம் என்றே செல்லலாம். ஏனென்றால் எந்த காரியத்தையும் பயமின்றி துணிவாக செய்வார்கள். அதன் பின் விளைவுகளை அறிந்தாலும், எது வந்தாலும் நான் சாதிக்க தயார் என்ற மன நிலையில் தான் இருப்பார்கள்.
இளமையில் வரும் காதல் அது நிரந்தரமானதா ? இவர் எனக்கு கட்டாயமாக வாழ்க்கை துணையாக வருவாரா? என்ற எண்ணமெல்லாம் இல்லாமல் கண்மூடித்தனமாக காதலிப்பவர்களுக்கு உண்டு.
இந்நிலையில், காலங்கள் கடந்து செல்லும் போது, தான் காதலித்தவளோ அல்லது காதலித்தவனோ சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாகவோ அல்லது குடும்ப சூழ்நிலை காரணமாகவோ திருமணம் செய்துகொள்ள இயலாத நிலை வரலாம்.
அதன் பின் இளமையில் இதான் என் வாழ்க்கை துணை என்றிருந்த நிலை மாறி, வீட்டில் பெற்றோர் சொல்பவரை தான் திருமணம் செய்ய வேண்டுமென்ற நிலை வரும். அப்போது பெற்றோரின் முடிவின்படியே பெற்றோர்கள் சொல்லும் நபரை திருமணம் செய்து கொள்வார்கள்.
என்னதான், பெற்றோர்கள் முடிவின்படி திருமணம் செய்தாலும், பழைய காதலி அல்லது பழைய காதலனின் நினைவுகள் மனதில் பட்டாம்பூச்சியாய் பறந்து கொண்டிருக்கும். இந்த நினைவுகள் புதிய வாழ்க்கை துணையுடனான உறவில் விரிசலை ஏற்படுத்தும். இதனை தடுப்பதற்கான சில வழிகளை பற்றி பாப்போம்.
பழைய காதல் என்ன காரணங்களுக்காக நம்மை விட்டு பிரிந்து சென்றது என்று அறிந்து கொண்டு, பிரிவை குறித்த நியாயமான காரணங்களை உள்வாங்கி கொள்ளுங்கள். பழைய காதலை மறக்க நாட்கள் எடுக்கத்தான் செய்யும், மறந்து, புதிய வாழ்க்கை துணையுடன் சந்தோசமாக வாழ கற்றுக்கொள்ளுங்கள்.
நம்மில் சிலர் பழைய காதலை மறக்க வேண்டும் என்பதற்காக, உடனடியாக புதிய உறவுகள் தேர்ந்தெடுப்போம், அல்லது பழைய காதலியை பொறாமைப்பட வைக்க வேண்டும் என்பதற்காவும் புதிய துணையை தேர்ந்தெடுப்போம்.
இப்படி அவசரப்பட்டு எடுக்கின்ற முடிவு, நாமே நம் உணர்வுகளை சிதைத்து கொள்வதற்கான வழிகள், மேலும், நாம் புதிதாக எடுத்த துணையுடன் உண்மையான உறவுடன் இருக்க இயலாத நிலை ஏற்படக் கூடும்.
உங்களை நீங்களே ஒப்பிட்டு பார்ப்பதை தவிர்த்து விடுங்கள். நண்பர்களுக்கெல்லாம் திருமணம் ஆகிவிட்டதே. அவர்களுக்கெல்லாம் புதிய உறவுகள் கிடைத்து விட்டதே என்று எண்ணுவதை தவிருங்கள்.
யாருக்கும் பிரச்னை இல்லாத வாழ்க்கை அமைந்து விடாது. அது சாத்தியம் கிடையாது. அது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாக இருக்கலாம். அதனால் மற்றவர்களுடன் ஒப்பிடுவதை தவிர்த்துவிட்டு புதிய வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
நம் காதலில் தான் பிரிவு ஏற்பட்டு விட்டது இனிமேல், நண்பர்களாவாவது பேசுவோம் என்று பேசினால், அது சாத்தியமற்ற உறவு. காதலித்த மனம் எப்படி நண்பராக ஏற்றுக்கொள்ளும். ஒரு வேலை நீங்கள் உங்கள் புதிய துணையுடன் மகிழ்ச்சியாக வாழ்கிறீர்கள் என்றால், உங்கள் பழைய காதலியுடன் நண்பராக பேசலாம்.
முதலில் உங்களை நீங்களே நேசிக்க துவங்குங்கள். உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள். உங்களுக்கான முடிவுகளை நீங்களே எடுக்க கற்றுக் கொள்ளுங்கள். உங்களை நீங்களே பெருமையாக நினைத்துக் கொள்ளுங்கள்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…