இன்று நாம் அனைவரும் அன்னையர் தினத்தை மிக மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறோம். நாம் கொண்டாடுகிற அனைத்து பண்டிகைகளும் எதோ ஒரு காரணத்தினால் தான் உருவாகி இருக்கும்.
அந்த வகையில், நாம் இந்த பதிவில் அன்னையர் தினம் எவ்வாறு உருவானது என்பது பற்றி பார்ப்போம்.
அன்னா ஜார்விஸ் என்பவர் துவக்கி வைத்தது தான் இந்த அன்னையர் தினம். அன்னா ஜார்விஸ் திருமணமாகாதவர். ஆனால், இவர் அன்னைகளுக்காக அரும்பாடுபட்டவர் என்பதால், இவரை மையப்படுத்தி அன்னையர் தினம் உருவாக்கப்பட்டது.
சமூக நலனில் அக்கறை கொண்ட ஜார்விஸ், ஏதாவது ஒரு நாளையாவது எல்லாரும் இணைந்து, தங்களை பெற்ற தாய்மாரை எண்ணி, அவர்கள் உயிரோடு இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் அவர்களை கெளரவிக்க வேண்டும் என விரும்பினார். அந்த வகையில், அன்னையர் தினம் கொண்டாடிய முதல் பெண்மணி என்ற பெருமை ஜார்விஸை தான் சேரும்.
இதனையடுத்து, இந்த நாளை உருவாக்குவதற்காக பெரும் பாடுபட்டு, அனைத்து மக்களிடையேயும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மக்களும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், 1911-ம் ஆண்டு அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது.
அதனை தொடர்ந்து, அதிபர் உட்ரோ வில்சன் 1914-ம் ஆண்டு மே 8-ம் தேதி, அறிக்கை ஒன்றில் கையெழுத்திட்டார். அந்த அறிக்கையில் மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக கொண்டாடப்படும் என்று எழுதப்பட்டிருந்தது. இப்படி தான் இந்த அன்னையர் தினம் உருவானது.
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…
சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி…
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…