எப்படி வந்தது "தந்தையர் தினம்" தெரியுமா ?

Default Image

ஓவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை சர்வதேச தந்தையர் தினமாக கொண்டாடப்படுகிறது.அதன்படி இன்று தந்தையர் தினமாக கொண்டாடப் பட உள்ளது. உலகின் 52 நாடுகளில் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை வேறுபகுதிகளில் பிற நாட்களிலிலும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

அமெரிக்காவில் வில்லியம்ஸ் ஜாக்சன் ஸ்மார்ட் டோட் என்பவர் 1872 -ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவ வீரராக இருந்தார். ஜாக்சன் ஸ்மார்ட்க்கு ,எல்லன் என்ற மனைவி இருந்தார்.இந்த  தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் தான் சொனாரா ஸ்மார்ட் டோட்.
சொனாரா ஸ்மார்ட் டோட் 16 வயதாக இருக்கும் போது தனது தாய் ஆறாவது பிரசவத்திற்கு சென்றபோது எதிர்பாராத விதமாக உயிர் இழந்தார். தன் மனைவி எல்லன் இறந்த பிறகு ஜாக்சன் ஸ்மார்ட் மறுத்திருமணத்தை பற்றி சிறிதும் யோசிக்காமல் தனது குழந்தைகளின் எதிர்காலத்திற்காக மட்டுமே வாழ்ந்தார்.

ஜாக்சன் ஸ்மார்ட் இந்த செயல் அவரது மகன் சொனாரா ஸ்மார்ட்டை  வெகுவாக கவர்ந்தது.இந்நிலையில் 1909 ஆம் ஆண்டு சர்வதேச அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. இதையறிந்த சொனாரா ஸ்மார்ட் என் தந்தையின் தியாகம், அன்னையர்களின் தியாகத்திற்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை என அவர் கூறி வாதமிட்டார்.

மேலும் என் தந்தையின் பிறந்தநாளை தந்தையர் தினமாக கொண்டாடப்பட வேண்டும் என தேவாலயத்தில் ஆவண செய்தார். இதற்கு அனுமதியும் கொடுக்கப் பட்டது.அன்று முதல் சர்வதேச தந்தையர் தினமாக கொண்டாடப்படுகிறது. அப்போதைய அமெரிக்க அதிபர் நிக்சன் தந்தையர் தினத்தை அங்கீகரித்தார்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்