பிள்ளைகளின் காதல் அல்லது திருமண உறவு அன்னையரால் பாதிக்கப்படும் என்பது உண்மையா?

Default Image

ஒரு பெண்ணின் வயிற்றில் கரு உருவான நொடி முதல் அன்னை மற்றும் பிள்ளைகளுக்கிடையேயான உறவு தொடங்குகிறது. தனக்குள் உருவான கருவை பார்த்து பார்த்து வளர்த்து பாதுகாத்து வந்து, குழந்தையை பெற்றெடுத்த பின்னும் அந்த கவனம் குறையாமல் கண்ணும் கருத்துமாய் பேணிக்காப்பாள் அன்னை.

தன் பிள்ளைகளின் வாழ்வை வடிவமைக்கும் சக்தி கொண்ட அன்னையர் மற்றும் அவர்களின் தாய்ப்பாசம், அதே பிள்ளைகளின் காதல் அல்லது திருமண உறவை எப்படி பாதிக்கிறது என்று இந்த பதிப்பில் படிக்கலாம் வாருங்கள்..!

பந்தம் ஏற்பட்ட தருணம்!

குழந்தைகளும் தாயின் வயிற்றில் உருவான நொடி முதலே அன்னையின் சொல் மற்றும் செயல்களைக் கேட்டு, அவற்றை உட்கிரகித்து, கற்று வளர்கின்றன. பிறந்த நிமிடம் முதல் வயது பருவத்தை அடையும் வரை, தாயின் வார்த்தைகள், செயல்கள், எண்ணங்கள் போன்றவையே குழந்தையின் முழு முதல் ஆசானாக அமைந்து குழந்தையின் குண நலனை வடிவமைக்கின்றன; சிலரோ தாய் தன்னை விட்டு பிரியும் வரை தாயின் அறிவுரையை நாடி நின்று செயலாற்றி, தாய் இறந்த பின் அதிகம் திண்டாடுவதுண்டு.

இவ்வாறு உறுதியான முறையில் பல ஆண்டுகளாக உருவான தாய் – பிள்ளையின் உறவு, காதல் அல்லது திருமணம் என்று வரும் பொழுது அவ்வுறவுகளில் சில பாதிப்பை ஏற்படுத்துவதாக சமீபத்தில் ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது.

என்ன ஆய்வு?

ஓஹியோ மாநில பல்கழைக்கழகம் தாய் – பிள்ளை உறவு குறித்த ஒரு சுவாரசியமான ஆய்வினை மேற்கொண்டது. அந்த ஆய்வில் பெரும்பாலுமான மக்களில், தாயின் காதல் அல்லது மண வாழ்க்கை எப்படி அமைந்ததோ, அதே போன்று தான் அவர்தம் பிள்ளைகளின் வாழ்வும் அமைவதாக கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

பிறந்ததில் இருந்து தாயின் அரவணைப்பில் உருவாகி வளரும் குழந்தை தன் தாயை தான் வாழ்க்கை முழுதும் பின்பற்றுவதாக கூறப்படுகிறது. மிக அரிதாகவே பிள்ளைகள் தாயின் குண நலனில் இருந்து வேறுபட்டு காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.

எப்படிப்பட்ட ஒற்றுமை?

சுமார் 7000​+ தாய்-பிள்ளைகள் கலந்து கொண்ட ஆய்வினில், தாய்மார்கள் காதலுடன் கூடிய சுமூகமான உறவை மேற்கொண்டிருந்தால் பிள்ளைகளின் வாழ்வும் அவ்வாறே இருப்பதாகவும், தாயின் வாழ்வு பிரச்சனைகள் நிறைந்ததாக இருந்தால் பிள்ளைகளும் அது போன்ற பிரச்சனைகளை தங்கள் வாழ்வில் சந்தித்ததாகவும் முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.

இந்த பதிப்பை படிக்கும் நண்பர்கள், பல குழந்தைகளின் எதிர்காலத்தை காக்க அவரவர்களுக்கு தெரிந்த அன்னையருக்கும் பெற்றோருக்கும் பகிர்ந்து, மற்றவர் பிரச்சனைகளின்றி வாழ உதவவும்.. பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உங்களின் ஒரு பகிர்தல் உதவியாக இருக்கும்..!

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்