நீங்கள் சிங்கிளா? காதலர் தினத்தன்று சிங்கிளாக இருப்பதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
காதலை – அன்பை கொண்டாடும் தினமான, இந்த உலக காதலர் தினத்தில் பல அதிர்ஷ்டசாலிகள் துணையோடு இணைந்து மகிழ்ந்திருப்பர்; மற்றும் பலரோ தனிமையில் ‘சிங்கிள்ஸ்’ எனும் பெயர் கொண்டு சுற்றிக் கொண்டிருப்பர். சிங்கிளாய் இருக்கிறோமே என்று வருத்தப்படுபவர்கள் தான் அதிகம்; இவ்வாறு சிங்கிளாய் இருப்பவர்கள் உண்மையில் வருத்தப்பட வேண்டிய அவசியமே இல்லை.
சிங்கிள் நபர்கள் தங்களின் நிலையை எண்ணியும், காதலிப்பவர்களின் கஷ்டங்களை எண்ணி பார்த்தும் கொண்டாட வேண்டிய தினமே – காதலர் தினம்! இந்த பதிப்பில் காதலர் தினத்தன்று சிங்கிளாக இருப்பதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம்.
டென்ஷன் இல்லை
காதலர் தினத்திற்கு காதலிக்கு அல்லது காதலனுக்கு என்ன பரிசு வழங்குவது, வழங்கும் பரிசு பிடிக்குமா – பிடிக்காதா என்ற கவலை, டென்ஷன் எதுவும் சிங்கிள்ஸிற்கு கிடையாது.
எல்லா நாட்களையும் போல, காதலர் தினத்தையும் சாதாரணமாக பதட்டமின்றி கடக்கலாம்.
எதிர்பார்ப்பு & ஏமாற்றம் இல்லை
காதலால் ஏற்படக்கூடிய ஏமாற்றமோ, துணை இதை செய்ய வேண்டும் – செய்யக்கூடாது போன்ற எதிர்பார்ப்புகளோ இல்லாமல் நிம்மதியாக வாழ்க்கையை வாழலாம்.
பணம் மிச்சம்!
காதலர் தினம், பிற தினங்கள் என துணைக்காக அது-இது என காசை செலவழித்து கடனில் வாழ வேண்டிய அவசியம் இல்லை; காதலில் விழாமல் சிங்கிள்ஸாக இருக்கும் நபர்கள் தனக்காக, தனது வாழ்வின் முன்னேற்றத்திற்காக காசை பயன்படுத்தி, வாழ்வில் முன்னேறலாம்.
நீயாக இரு!
காதலர் தினத்தில் கூட உங்களுக்கு பிடித்தமானதை மட்டும் செய்து, உங்கள் விருப்பபடி வாழலாம்; உங்களுக்கான நேரத்தை செலவழித்து, தன்னை தானே நேர் செய்து கொண்டால் தான், வாழ்க்கை நேரடி உயர்வை எட்டும்.
நண்பர்கள்..
காதலிக்க யாரும் இல்லையே என்று எண்ணி வருந்தாமல், உங்களைப்போல் இருக்கும் சிங்கிள் நண்பர்களுடன் சேர்ந்து பார்ட்டி செய்து ஜாலியாக பொழுதை போக்கலாம்.