ஒரு பெண்ணுக்கு மிகச்சரியான புகுந்த இடம் கிடைத்துள்ளது என்பதை உணர்த்தும் 5 விஷயங்கள்!

Default Image

ஒவ்வொரு பெண்ணுக்கும் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற விருப்பங்கள் இருப்பது போலவே, நல்ல மணாளன் கிடைக்க வேண்டும், நல்ல புகுந்தகம் அமைய வேண்டும் போன்ற ஆசைகள் இருக்கும். ஒரு பெண்ணுக்கு நல்ல புகுந்த இடம் அமைந்துள்ளது அறிவது?

ஒரு பெண்ணுக்கு மிகச்சரியான புகுந்த இடம் கிடைத்துள்ளது என்பதை உணர்த்தும் 5 விஷயங்கள் என்னென்ன என்று இப்பொழுது பார்க்கலாம்

உரிமை.!

திருமணமான பின், புகுந்த வீட்டிற்குள் அடியெடுத்து வைக்கும் மருமகளுக்கு உரிய உரிமை, திருமணமான முதல் நாளே கிடைத்தால், அப்பெண்ணை விட சிறந்த அதிர்ஷ்டசாலி எவரும் இலர். கிடைத்த உரிமை பல காலங்கள் தொடர்ந்தால், அவளே பெரும் பேறு செய்தவள் எனலாம்.

இன்னொரு பிறந்தகம்

கிடைத்த மாமியார்-மாமனார் மற்றும் மைத்துனர் உறவுகள், பெற்றோர் போன்றும், சகோதர-சகோதரிகள் போன்றும் பாசம் காட்டினால், ஒரு பெண்ணின் புகுந்த வீடும் இன்னொரு பிறந்தகமாகும்.

இந்த மிகப்பெரிய விஷயம் ஒரு பெண்ணுக்கு புகுந்த வீட்டில் கிடைத்து விட்டால், அவள் சிறந்த உறவுகளை பெற்றுள்ளாள் என்று பொருள். மேலும் அந்த பெண் பெரும் புண்ணியம் செய்தவள் ஆவாள்.

உதவி

பிறந்த வீட்டில் எந்த ஒரு தீங்கு நேர்ந்தாலும், தாய்-தந்தை மற்றும் சகோக்கள் புரிவது போல், புகுந்த வீட்டு உறவுகளும் துன்பமான நேரங்களில் தூற்றாமல், உடன் நின்று உதவினால், அது அப்பெண் பெற்றுள்ள புகுந்தகத்தாரின் பரந்த மனம்பான்மையையும் நற்குணத்தையும் குறிக்கிறது; மேலும் இத்தகைய குடும்பம் அமைக்கப்பெற்ற பெண் பெரும் அதிர்ஷ்டம் கொண்டவள் ஆவாள்.

படுக்கைக்கு அருகில், எலுமிச்சையை வைத்துக்கொண்டு உறங்குவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?   read more…

சுதந்திரம்

பிறந்த வீட்டில் இருக்கையில் கிடைத்த சுதந்திரம் போல், புகுந்த வீட்டிலும் ஒரு பெண்ணுக்கு போதிய சுதந்திரம் கிடைத்தால், அவள் புகுந்த இல்லத்தார் மிகவும் சிறந்தவராவர்.

உறுதுணை

காலம் எத்தகைய மாற்றங்களை வாழ்வில் ஏற்படுத்தினாலும், அதை துணிச்சலோடு எதிர்த்து போராட, பிறந்த வீட்டின் உதவியோடு புகுந்த வீட்டினரும் உறுதுணையாக இருந்தால், ஒரு பெண்ணுக்கு அதை விட வேறு என்ன வேண்டும்.. இத்தகைய உறவுகள் இருந்தால், எந்த பெண்ணும் எந்த ஒரு விஷயத்தை வேண்டுமானாலும் சாதிப்பாள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்