Rawa Idly : அட ரவையில் இட்லி செய்யலாமா..? அது எப்படிங்க..?
காலை மற்றும் இரவு உணவுக்கு பெரும்பாலானோர் வீட்டில் இட்லி செய்வது வழக்கம். இந்த இட்லியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவதுண்டு. அந்த வகையில் தற்போது இந்த பதிவில், வித்தியாசமான முறையில் ரவையை வைத்து எப்படி இட்லி செய்யலாம் என்று பார்ப்போம்.
தேவையானவை
- ரவை – 1 கப்
- தண்ணீர் – 2 கப்
- உப்பு – தேவையான அளவு
- சமையல் சோடா – 1/2 டீஸ்பூன்
Rawa Idly செய்முறை
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் ரவையை போட்டு, அதில் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். அதில் உப்பு, சமையல் சோடா போன்றவை சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
மாவு கெட்டியாக வந்த பின் அதனை அரை மணி நேரம் ஊற வைத்து, பின்பு மாவை மீண்டும் எடுத்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். கையில் மாவு ஒட்டாத அளவிற்கு வந்த பின், மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் வைத்து தண்ணீர் தெளித்து அடுப்பில் வைத்து வேக வைத்து இறக்க வேண்டும்.
ரவை இட்லி நன்றாக வெந்தவுடன் பொன்னிறமாக மாறிவிடும். இட்லி பொன்னிறமாக மாறிய பின் இறக்கி பரிமாற வேண்டும். இவ்வாறு வித்தியாசமாக ரவையில் இட்லி செய்து கொடுத்தால் வீட்டில் உள்ளவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.