லைஃப்ஸ்டைல்

Ragi Veg Soup : குழந்தைகளுக்கு பிடித்த சத்தான சூப் செய்வது எப்படி…?

Published by
லீனா

நாம் குழந்தைகளுக்கு பல வகையான உணவுகளை செய்து கொடுப்பதுண்டு. அந்த வகையில், குழந்தைகள் முதல் பெரியவர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ராகி காய்கறி சூப் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

ராகியில் வைட்டமின்கள், தாதுக்கள், பொட்டாசியம், நார்ச்சத்துக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது.  ராகி குறைந்த கலோரிகள் கொண்டுள்ளதால், இது பசி உணர்வைக் குறைத்து, உடல் பருமனை குறைக்க உதவுகிறது. ராகி நார்ச்சத்து நிறைந்தது என்பதால், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

ராகி வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகமாக இருப்பதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தற்போது இந்த பதிவில் ராகி காய்கறி சூப் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை 

  • ராகி மாவு – 1 கப்
  • தண்ணீர் – 2 கப்
  • கேரட் – 1/2 கப் பொடியாக நறுக்கியது
  • பீன்ஸ் – 1/2 கப்  பொடியாக நறுக்கியது
  • உருளைக்கிழங்கு – 1/2 கப் பொடியாக நறுக்கியது
  • வெங்காயம் – 1/2 கப் பொடியாக நறுக்கியது
  • இஞ்சி – சிறிதளவு
  • பூண்டு – 10 பல்
  • மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு
  • கரம் மசாலா – 1/4 தேக்கரண்டி
  • சீரகம் – 1/4 தேக்கரண்டி
  • கடுகு – 1/4 தேக்கரண்டி
  • வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
  • பட்டை பொடி – சிறிதளவு
  • மிளகுத்தூள் – சிறிதளவு
  • கொத்தமல்லி – சிறிதளவு
  • புதினா – சிறிதளவு
  • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை 

முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் ராகி மாவு மற்றும் தண்ணீரை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கரம் மசாலா, கடுகு, வெந்தயம், பட்டை, பொடி மற்றும் மிளகுத்தூள் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும் .

பின் வெங்காயம் இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து வதக்கி, கேரட் பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும். அதன்பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளற வேண்டும். பின் ராகி மாவு கரைசலை ஊற்றி நன்றாக கலக்க வேண்டும். பின் 10 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்க வேண்டும். இறக்கிய பின், கொத்தமல்லி புதினா சேர்த்து கிளறி பரிமாற வேண்டும்.

குழந்தைகளுக்கு அடிக்கடி இந்த சூப்பை செய்து கொடுத்தால், உடல் ஆரோக்கியம் மேபடும். மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

Published by
லீனா

Recent Posts

தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர்! எப்போது? ஏன்.?

திருவாரூர் : வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. திருவாரூரில் உள்ள தமிழ்நாடு…

5 mins ago

ED ரெய்டு : “மடியில் கனமில்லை., வழியில் பயமில்லை” ஆதவ் அர்ஜுனா விளக்கம்.!

சென்னை : பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் தொடர்புடைய பல்வேறு இடங்களில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி முதல் அமலாக்கத்துறையினர் …

13 mins ago

உங்க பஞ்ச் டயலாக்கிற்கு கதை ரெடி.! தனுஷை வச்சு செய்த நயன்தாரா.!

சென்னை : நயன்தார விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் நவம்பர் 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

20 mins ago

அமரன் பட பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம்: இந்து முன்னணியினர் கைது.!

திருநெல்வேலி : நெல்லை மேலப்பாளையத்தில் பிரதான சாலையில், அமரன் திரைப்படம் வெளியாகியுள்ள அலங்கார் திரையரங்கின் மீது, மர்ம நபர்கள் பெட்ரோல்…

24 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்- ஸ்ருதி பணக்கார பைத்தியமா?. என்ன சொல்றீங்க விஜயா?.

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில்[நவம்பர் 16]மீனாவின் புதிய பிசினஸ் ஐடியா.. சப்போர்ட் செய்யும் ஸ்ருதி.. மீனாவின் புதிய…

40 mins ago

“போலி முகமூடி அணியும் தனுஷ்”…நயன்தாரா அதிரடி குற்றச்சாட்டு! நடந்தது என்ன?

சென்னை : நடிகர் தனுஷ் மற்றும் நடிகை நயன்தாரா இருவருக்கும் என்ன பிரச்சினை என ஒன்னும் தெரியாமல் திடீரென அறிக்கை…

49 mins ago