காலையிலே பூரி போர் அடிக்குதா.? இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க… அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்..!!

puri break fast

காலையில் எழுந்தவுடன் நம்மில் பலர் விரும்பி பூரியை தான் விரும்பி சாப்பிடுவார்கள்.  இந்தியர்களுக்கு அவர்களின் பூரிகள் மீதான அன்புக்கும் அறிமுகம் என்பதே தேவையில்லை. பூரி மீதான இந்த அன்பு இன்றுவரை மாறாமல் உள்ளது. பூரியை  மசாலா பூரி, கீரை பூரி, பெட்மி பூரி, லூச்சி பூரி, அல்லது பீட்ரூட் பூரி கூட, என வகை வகையாக செய்து சாப்பிட்டு பார்திருப்பீர்கள்.

Puri
Puri [Image source: file image ]

ஆனால், நீங்கள் புதியதாக ஏதேனும் சுவையான பூரி செய்ய விரும்பினால், “காலிஃபிளவர் ஸ்டஃப்டு பூரி ” யை முயற்சி செய்து பாருங்கள். இதனை வெளிநாடுகளில் “Gobhi Puri ” என்று கூட கூறுவார்கள். இதனை நீங்களே உங்களுடைய வீட்டில் மிகவும் எளிமையான முறையில் செய்து சாப்பிடலாம். இதற்கு என்னென்ன பொருட்கள் வேண்டும், எப்படி செய்யலாம் என்பதை விவரமாக பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் 

Puri
Puri [Image source: file image ]

2 கப் ஆட்டா அல்லது முழு கோதுமை மாவு 3/4 டீஸ்பூன் நெய் 1 டீஸ்பூன் மஞ்சள் ருசி உப்பு காலிஃபிளருக்கு 1 கப் காலிஃபிளவர், துருவிய 1 1/2 டீஸ்பூன் பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய 2 டீஸ்பூன் வேர்க்கடலை, பொடியாக பொடியாக நறுக்கியது, மிளகாய் 1/2 டீஸ்பூன் விதைகள் 2 டீஸ்பூன் கொத்தமல்லி இலைகள், உப்பு

செய்முறை 

முதலில் பூரிக்கு மாவை தயார் செய்ய வேண்டும். இதற்கு, ஒரு பெரிய கிண்ணத்தில் ஆட்டா கோதுமை மாவு, மஞ்சள், உப்பு மற்றும் நெய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பிசையவேண்டும். இவை அனைத்தையும் சேர்த்து ஒரு மென்மையான மாவை உருவாக்க படிப்படியாக தண்ணீர் சேர்க்கவும்.

Gobhi Puri
Gobhi Puri [Image source: file image ]

பிறகு, தயாரிக்கப்பட்ட அந்த மாவை ஈரமான துணியால் மூடி, சுமார் 15-20 நிமிடங்கள் ஊற  வைக்கவும். ஸ்டஃபிங்கிற்கு, காலிஃபிளவர்களை தேவையான அளவிற்கு துருவி வைத்துக்கொள்ளுங்கள். பிறகு தேவையான அளவிற்காய் பச்சை மிளகாய், வறுத்த வேர்க்கடலை, சிவப்பு மிளகாய் தூள், சீரகம், கொத்தமல்லி இலைகள் மற்றும் உப்பு ஆகியவற்றை நன்றாக அரைத்து 15 நிமிடங்கள் வரை இது  அனைத்தையும் நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.

Gobhi Puri Recipe
Gobhi Puri Recipe [Image source: file image ]

பிறகு இதனை பூரிக்காக பிசைந்து வைத்திருக்கும் மாவுடன் சேர்த்து பிசைந்துகொள்ளுங்கள். பிறகு மாவை தட்டையாக உருட்டவும். பின், எண்ணெய்யை ஒரு கடாயில் சூடாக வைத்துக்கொண்டு தட்டையாக தயார் செய்து வைத்திருக்கும் மாவை அதில் போட்டு சூடாக்கி எடுத்தீர்கள் என்றால் அட்டகாசமான பூரி ரெடி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்