நெஞ்சு சளி பிரச்சனையா? கவலைய விடுங்க…! இதோ சூப்பர் டிப்ஸ்..!
மழைக்காலம் தொடாங்கி விட்டாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படக் கூடிய சளி பிரச்சனையில் இருந்து விடுபட என்ன செய்யலாம்.
மழைக்காலம் தொடாங்கி விட்டாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படக் கூடிய நோய்களில் ஒன்று சளி பிரச்சனை தான். இந்த பிரச்சனையின் தொடக்கத்திலேயே நாம் இதற்கு மருந்து செய்து சாப்பிட்டால் நல்லாது. இந்த பிரச்சனையை முற்ற விட்டால், இது மரணம் வரைக்கூட கொண்டு செல்லும். தற்போது இந்த பதிவில், நெஞ்சு சளி பிரச்னையில் இருந்து விடுபட இயற்கையான முறையில் என்ன செய்யலாம் என்பது பற்றி பார்ப்போம்.
தேவையானவை
- மிளகு – 6
- வெற்றிலை – 2
- அருகம்புல் – ஒரு கைப்பிடி
செய்முறை
முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி, மேலே கூறப்பட்ட மூன்று பொருட்களையும் போட்டு நன்கு கொதிக்கவிட வேண்டும்.
இது அரை டம்ளராக சுண்டிய பின், வடிகட்டி எடுத்து குடிக்க வேண்டும். இதை குடிப்பதன் மூலம், ஆஸ்துமா, சளி, நேனு சளி போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.