சளி இருமலுக்கு இந்த ரசம் வைங்க.? சளியும் காலி ரசமும் காலி.!

Published by
K Palaniammal

உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு இந்த கொள்ளு பயிருக்கு உண்டு, இந்த கொள்ளு பயிரை வேகவைத்த தண்ணீரை கீழே சிந்துவிடாமல் அதிலே ரசம் வைப்பது எப்படி என பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • சீரகம்    –   2 ஸ்பூன்
  • மிளகு     –   ஒரு ஸ்பூன்
  • பூண்டு   –  5 பள்ளு
  • வர மிளகாய்    –  3
  • புளி  –  நெல்லிக்காய் அளவு
  • கொள்ளு வேகவைத்த தண்ணீர்  –   ஒரு கப்
  • கொத்தமல்லி இலை   –  சிறிதளவு
  • நல்லெண்ணெய்   –   இரண்டு ஸ்பூன்
  • கடுகு   –  அரை ஸ்பூன்
  • பெருங்காயம்   –  கால் ஸ்பூன்

செய்முறை

சீரகம், மிளகு, பூண்டு வர மிளகாய் ஆகியவற்றை கொரகொரப்பாக பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். புளிக்கரைசலை கரைத்து அதிலே அரை தக்காளியை பிழிந்து விட்டு மஞ்சள் தூள், கொத்தமல்லி இலைகளை சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வைக்கவும்.

தம்மா துண்டு கடுகுல இவ்வளவு விஷயம் இருக்கா.? இது தெரியாம போச்சே.!

ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய், கடுகு ,வரமிளகாய் சேர்த்து பொரிந்ததும் பொடித்து வைத்துள்ளவற்றை சேர்த்து கிளறவும். பின்பு புளி கரைசலை சேர்த்து சூடு ஆனதும் கொள்ளு தண்ணீரையும் சேர்த்து கொதி வருவதற்கு முன்பே அடுப்பை அணைத்து விட வேண்டும். அதன் பிறகு தண்ணிர்சேர்க்க கூடாது, கொதிக்க விடக்கூடாது. இப்போது சத்தான கொள்ளு ரசம் ரெடி.

பயன்கள்

உடல்நிலை சரியில்லாத நேரத்தில் எதையும் சாப்பிட தோன்றாத மனநிலை இருக்கும். குறிப்பாக சளி, காய்ச்சல் ,இருமல் இருக்கும்போது அந்த உணர்வு அனைவருக்குமே தோன்றும். அந்த நேரங்களில் இந்த ரசத்தை செய்து கொடுத்தால் நாவிற்கும் உடம்புக்கும் இதமாக இருக்கும். நெஞ்சு சளிக்கு நல்ல பலனை கொடுக்கும்

‘இளைத்தவனுக்கு எள்ளும் கொழுத்தவனுக்கும் கொள்ளையும் கொடு’ என்பது பழமொழி. இந்த பழமொழி கிணங்க ஒருவர் உடல் எடை குறைவாக இருந்தால் அவருக்கு எள்ளு  கொடுத்தால் உடல் எடை அதிகரிக்கும். அதுவே உடல் பருமனாக இருப்பவருக்கு இந்த கொள்ளை கொடுக்கலாம்.

இந்த கொள்ளு உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி கொழுப்பை குறைக்கும். இதனால் உடல் எடை குறையும். உடல் வலிமைக்கும் தசை இருக்கத்திற்கும் சிறந்தது .

தவிர்க்க வேண்டியவர்கள்

இந்த கொள்ளு பயிறு உடலில் சூட்டை அதிகரிக்கக் கூடியது. மாதவிடாய் காலங்களில் அதிக உதிரப்போக்கு உள்ளவர்கள் தவிர்ப்பது சிறந்தது. மேலும் உடல் சூடு உள்ளவர்கள் குறைந்த அளவு எடுத்துக் கொண்டு வரலாம்.

குதிரையின் பிரதான உணவு இந்த கொள்ளு பயிர் ஆகும். குதிரையின் பலம்  நமக்கு வேண்டுமென்றால் வாரம் ஒரு முறையேனும் இந்த கொள்ளு பயிரையும் ரசத்தையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Recent Posts

ஹெலிகாப்டர் செல்ல அனுமதி மறுப்பு! 1 மணி நேரம் காத்திருந்த ராகுல் காந்தி!

ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…

28 mins ago

கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி?. எளிமையான செய்முறை விளக்கங்கள்..

சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…

53 mins ago

300 கோடி வசூலை நெருங்கும் அமரன்…எப்போது ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா?

சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…

1 hour ago

“பேச்சுவார்த்தை நடத்துங்கள்.!” ஜெயம்ரவி விவகாரத்து வழக்கில் நீதிமன்றம் ஆணை.!

சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…

2 hours ago

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கிண்டி மருத்துவமனை! இளைஞர் உயிரிழந்ததால் உறவினர்கள் போராட்டம்!

சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…

3 hours ago

20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ‘மைக் டைசன்’! பரபரப்பான குத்துச்சண்டை ..யாருடன்? எப்போது?

டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…

3 hours ago