கர்ப்பிணி பெண்களுக்கு பார்லி சூப் இப்படி செஞ்சு குடுங்க..!
Barley soup-பார்லி சூப் செய்வது எப்படி என்றும் அதன் நன்மைகள் பற்றியும் இப்பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
- பார்லி =6 ஸ்பூன்
- பூண்டு =4
- கேரட் =சிறிதளவு
- பீன்ஸ் =சிறிதளவு
- சீரகம் =1/2 ஸ்பூன்
- கொத்தமல்லி இலை
- மிளகு தூள் =1 ஸ்பூன்
- எண்ணெய் =4 ஸ்பூன்
- சின்ன வெங்காயம் =6
செய்முறை:
பார்லியை உப்பு சேர்த்து நன்கு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும், அதில் இரண்டு ஸ்பூன் தனியாக எடுத்து வைத்துவிட்டு மீதமுள்ளவற்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதிலே சீரகம் சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் ,பூண்டு சேர்த்து வதக்கவும். பின்பு பீன்ஸ், கேரட் ஆகியவற்றையும் சேர்த்து கிளறி, எடுத்துவைத்துள்ள இரண்டு ஸ்பூன் பார்லியையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும் .
5 நிமிடம் கழித்து அரைத்து வைத்துள்ள பார்லியையும் சேர்த்து மீண்டும் அந்த காய்கறிகள் வேகும் வரை கொதிக்க விடவும் பிறகு கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும் .இப்போது உங்களது காரத்திற்கு ஏற்ப மிளகுத்தூள் சேர்த்து கிளறினால் ஆரோக்கியமான பார்லி சூப் ரெடி.
பார்லியின் நன்மைகள்:
- கர்ப்பிணி பெண்கள் நான்கு மாதத்தில் இருந்து பார்லியை சூப்பாகவோ அல்லது கஞ்சியாகவோ எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் கால் வீக்கங்கள் வராது .
- கர்ப்ப காலங்களில் ஏற்படும் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம். மேலும் பிறக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும்.
- குறிப்பாக மூளையில் செரோடோனின் என்ற மகிழ்ச்சியான ஹார்மோன் அதிகமாக சுரக்கும் இதனால் பிறக்கும் குழந்தை மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கும் என ஆராய்ச்சியில் கூறப்படுகிறது.
- சிறுநீரகத்தில் இருக்கும் கற்களை கரைக்க பார்லி உதவுகிறது.சர்க்கரையை கட்டுக்குள் வைப்பதில் ஓட்ஸை விட பார்லி 13 சதவீதம் அதிகமாக வேலை செய்கிறது என கூறப்படுகிறது.
- மேலும் பார்லியை இரவே ஊறவைத்து செய்வது தான் நல்லது. பொதுவாக எந்த ஒரு பொருளையும் அதிகமாக சூடு செய்தாலோ கொதிக்க வைத்தாலோ அதன் சத்துக்கள் வெளியேறும் ,ஆனால் பார்லியை அதிகமாக கொதிக்க வைத்தால் அதன் சத்துக்கள் அதிகமாகும் என ஆய்வில் கூறப்படுகிறது .
- கை கால் வலி ,வீக்கம் இருப்பவர்கள் மருந்து மாத்திரைகளுக்கு பதில் பார்லியையை தினமும் ஒரு டம்ளர் கஞ்சியாகவோ சூப்பாகவோ எடுத்துக்கொள்ளவும் .
- பார்லியை ஒரு நாளைக்கு இரண்டு கிளாஸ் அளவு குடிப்பது போதுமானது அளவுக்கு மீறி எடுத்துக் கொள்ளும் போது இது வாய் தொந்தரவை ஏற்படுத்தும்.மேலும் கர்ப்பிணி பெண்கள் 3 மாதங்களுக்கு மேல் தான் பார்லியை சேர்த்துக்கொள்ளவும் .
ஆகவே பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக பிறக்க கர்ப்பிணி பெண்கள் உங்கள் உணவில் பார்லியை அடிக்கடி சேர்த்துக் கொள்ளுங்கள்.