நவராத்திரி முதல் நாள் பிரசாதம்.. அசத்தலான சுவையில் வெண்பொங்கல் செய்வது எப்படி.?
நவராத்திரி பூஜைக்கு முதல் நாள் நெய்வேத்தியமான வெண்பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
சென்னை- நவராத்திரி பூஜைக்கு முதல் நாள் நெய்வேத்தியமான வெண்பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
தேவையான பொருட்கள்;
- பச்சரிசி ஒரு =கப்
- பாசிப்பருப்பு= ஒரு கப்
- பெருங்காயம் =அரை ஸ்பூன்
- முந்திரி=10- 20
- மிளகு =ஒரு ஸ்பூன்
- சீரகம்= ஒரு ஸ்பூன்
- பச்சை மிளகாய இரண்டு
- காய்ந்த மிளகாய்= இரண்டு
- இஞ்சி =இரண்டு துண்டுகள்
- நெய் =3-4 ஸ்பூன்
- கருவேப்பிலை சிறிதளவு
செய்முறை;
அரிசி மற்றும் பருப்பை கழுவி 20 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும் .பிறகு அரிசியை குக்கரில் சேர்த்து நான்கு கப் தண்ணீர் ஊற்றி அதாவது ஒரு கப் அரிசிக்கு நான் இரண்டு கப் தண்ணீர் விகிதம் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் கால் ஸ்பூன் பெருங்காயம் ,ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து மூன்றிலிருந்து நான்கு விசில் விடவும் .
மற்றொருபுறம் ஒரு தாளிப்பு பாத்திரத்தில் 3 ஸ்பூன் நெய் ஊற்றி முந்திரியை பொன்னிறமாக வறுத்து அதில் சீரகம் ,மிளகு, இஞ்சி, பச்சை மிளகாய் கருவேப்பிலை ,காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து தாளித்து ஒரு ஸ்பீன்ச் பெருங்காயம் சேர்த்து இறக்கி பொங்கலுடன் சேர்த்து நன்கு கலந்து விட்டால் சுவையான வெண்பொங்கல் தயாராகிவிடும்.