Potato Ring : உருளைக்கிழங்கில் அசத்தலான ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெடி..!
நம்மில் பலரும் உருளைக்கிழங்கை வைத்து பலவகையான சமையல் செய்வதுண்டு. ஆனால், அந்த உருளைக்கிழங்கை வைத்தே குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய Potato Ring செய்வது எப்படி என்று பார்ப்போம்.
உருளைக்கிழங்கில், மாவுச்சத்து, புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. உருளைக்கிழங்கில் உள்ள சத்துக்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.
தேவையானவை
- உருளைக்கிழங்கு – 4
- சீரகம் – 2 ஸ்பூன்
- கொத்தமல்லி – சிறிதளவு
- கான்பிளவர் மாவு – 2 ஸ்பூன்
- உப்பு – 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு குக்கரில் தண்ணீர் ஊற்றி உருளைக்கிழங்கை போட்டு நன்கு அவித்து எடுத்து அதனை தோல் உரித்து பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும். பிசைந்து வைத்துள்ள உருளைக்கிழங்கில் சீரகம், கான்பிளவர் மாவு, கொத்தமல்லி சிறிதளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் கொதித்தவுடன் உருண்டையாக பிடித்து வைத்துள்ள மாவை கையில் வைத்து தட்டையாக தட்டி, அதில் வாட்டர் பாட்டில் மூடி அல்லது உங்களது வீட்டில் உள்ள மற்ற ஏதாவது பாட்டிலின் மூடியை வைத்து ரிங் போன்ற வடிவத்தில் செய்து எடுத்து, கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறலாம்..
இந்த Potato Ring-ஐ குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர். நமது குழந்தைகளுக்கு கடையில் ஸ்நாக்ஸ் வாங்கிக் கொடுப்பதை விட, வீட்டிலேயே இப்படிப்பட்ட ஆரோக்கியமான சுகாதாரமான உணவை செய்து கொடுப்பது மிகவும் நல்லது.