லைஃப்ஸ்டைல்

Potato Lolly Pop : அட உருளைக்கிழங்கில் லாலி பப் செய்யலாமா..? அது அப்படிங்க..?

Published by
லீனா

நம் வீடுகளில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு காய்கறி வகை என்றால் அது உருளைக்கிழங்கு. இந்த உருளைக்கிழங்கை வைத்து, கூட்டு, பொரியல், குழம்பு என பலவகையான உணவுகளை தயார் செய்வதுண்டு.

இந்த உருளைக்கிழங்கில் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. இதில், பொட்டாசியம், இரும்பு, மெக்னீசியம், நார்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிகமாக காணப்படுகிறது. தற்போது இந்த பதிவில் உருளைக்கிழங்கை வைத்து வித்தியாசமான முறையில் லாலி பப் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை 

  • உருளைக்கிழங்கு – 200 கிராம்
  • பச்சை மிளகாய் – 3
  • கேரட் – ஒன்று
  • சோள மாவு – 2 டீஸ்பூன்
  • சீரகப்பொடி – அரை டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • இஞ்சி – சிறிய துண்டு
  • கொத்தமல்லி இலை – சிறிதளவு
  • சாட் மசாலா – அரை டீஸ்பூன்
  • எண்ணெய் – தேவையான அளவு
  • பிரட் – 6

Potato Lolly Pop செய்முறை 

முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு கேரட், உருளைக்கிழங்கை வேகவைத்து அதன் தோலை உரித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன்பின் பின் பிரட்டை சிறிதளவு தண்ணீரில் ஊற வைத்து பின்னர் தண்ணீரை பிழிந்து விட்டு எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் கொத்தமல்லி இலை ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு  அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இன்னொரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கு, கேரட் மற்றும் இஞ்சி கலவை, சீரகப்பொடி, சாட் மசாலா உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.

பிசைந்து வைத்த உருளைக்கிழங்கு கலவையில் ஊற வைத்த பிரட்டை தண்ணீரை பிழிந்து விட்டு , கான்பிளவர் மாவு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். அதன்பின்  பிறகு உருளைக்கிழங்கு கலவையை எடுத்து உள்ளங்கையில் வைத்து உருண்டையாக உருட்டி வைக்க வேண்டும்.

பின் அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் ஒவ்வொரு உருண்டையாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். அதன் பின் பொரித்தெடுத்த உருளைக்கிழங்கு உருண்டையில்  லாலிபாப் ஸ்டிக்கை வைத்து  அதனை பரிமாறலாம்.

இப்போது சுவையான உருளைக்கிழங்கு லாலிபப் தயார். உருளைக்கிழங்கை  நாம் குழம்பு, பொரியல் என ஒரே மாதிரியான முறையில் செய்து சாப்பிடுவதை விட இப்படி வித்தியாசமான முறையில் செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த உணவு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கும்.

Published by
லீனா

Recent Posts

நாளை தவெக தலைவர் விஜய் வைக்கும் விருந்து! யார் யாருக்கு தெரியுமா?

சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…

7 minutes ago

“மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டாம்” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

30 minutes ago

அதானி குழுமத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் ‘இனவெறி’ புகார்!

ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…

42 minutes ago

இரண்டாம் முறையாக கர்ப்பமான சிம்பு பட நடிகை.! சனா கானுக்கு குவியும் வாழ்த்துக்கள்…

சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…

45 minutes ago

INDvAUS: முதல் நாளில் செக் வைத்த ஆஸ்திரேலியா… தரமான பதிலடி கொடுத்த இந்தியா!

பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…

1 hour ago

2025ம் ஆண்டுக்கான அரசு பொதுவிடுமுறை நாட்கள் வெளியானது!

சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…

2 hours ago