ஆஹா! அண்ணாச்சியில் அண்ணாந்து பார்க்கக்கூடிய நன்மைகளா..!

annachi fruit

அன்றாடம் கிடைக்கக்கூடிய ஒரு சில பழங்களில்  அண்ணாச்சியும் ஒன்று. குறைந்த விலையில் மிக மலிவாக கிடைக்கக்கூடிய இந்த பழம் நம் உடலில் பல மாயாஜாலங்களை செய்கிறது. இதில் மிக அதிக அளவில் விட்டமின் சி சத்து 131 சதவீதம் உள்ளது. இதனால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது ரத்தத்தில் வெள்ளை அணுக்களை அதிகரிக்க செய்கிறது. அது மட்டுமல்லாமல் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி நீண்ட நேரம் நீடித்து இருக்கிறது.

இது ஸ்கர்வி  மற்றும் புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டுள்ளது.
இதில் உள்ள அதிக அளவிலான மாங்கனீஸ் சத்து உடலில் மெட்டபாலிசம் நடக்க ஏதுவாக அமைந்துள்ளது. ரத்தத்தில் மாங்கனிசு சத்து குறைந்த இருந்தால் வலிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும் வலிப்பு பிரச்சனை உள்ளவர்கள் இந்த அண்ணாச்சி பழத்தை தொடர்ந்து எடுத்துக் கொள்ளலாம்.

ஆஹா! வாழை இலையில் தினமும் சாப்பிட்டால் உடலுக்கு இவ்வளவு நன்மையா…

ப்ரோமலின் இதில் அதிகம் உள்ளதால் புரோட்டின் மாலிக்கிள்ஸ்  சிறிதாக உடைத்து எளிதாக ஜீரணிக்க செய்து நம் உடலில் புரதம் எளிதில் உள்கிரகித்து   கொள்ள உதவுகிறது. வயதானவர்கள்  அசைவ உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது அதில் உள்ள புரோட்டின் எளிதில் ஜீரணிப்பதில்லை இதனால் அஜீரணக் கோளாறு ஏற்படும். இதை தவிர்க்க அசைவம் எடுத்துக் கொண்ட பிறகு அண்ணாச்சி பழத்தை  ஜூஸாக எடுத்துக் கொண்டால் அதில் உள்ள புரதம் எளிதில் செரிமானம் ஆகும்.

புண்களை ஆற்றும் வல்லமை இந்த அண்ணாச்சி பழத்திற்கு அதிகம் உள்ளது. குடல்  சம்பந்தப்பட்ட தொந்தரவு உள்ளவர்கள் அண்ணாச்சி பழத்தை தொடர்ந்து எடுத்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். கர்ப்ப காலத்தில் கடைசி மாதம் எடுத்துக் கொண்டால் எளிதில் சுகப்பிரசவம் ஆகும். இந்த பழத்தை எடுத்துக்கொள்ளும் போது ஒரு சிலருக்கு நாக்கில் அரிப்பு ஏற்படும் இதனை தவிர்க்க ஜூஸாக எடுத்துக் கொள்ளலாம். மேலும் முடக்குவாதத்திற்கு ஒரு சிறந்த அருமருந்தாகும். சிறந்த வலி நிவாரணியாகவும் உள்ளது.

தவிர்க்க வேண்டியவர்கள்:

இந்த அண்ணாச்சி பழத்தை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது வயிற்று வலியை ஏற்படுத்தும். அலர்ஜி உள்ளவர்கள் தவிர்க்கவும். மேலும் சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை அறிந்து எடுத்துக் கொள்வது சிறந்தது. கருவுற நினைக்கும் பெண்கள் ஆரம்ப காலத்தில் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்