பொதுவாக மருத்துவர்கள் நம் உடம்பில் வைட்டமின் இ சத்து குறைபாடு ஏற்பட்டால் இந்த வைட்டமின் ஈ மாத்திரைகளை பரிந்துரைப்பார்கள் . ஆனால் இன்று பல அழகு சாதனங்களில் இந்த விட்டமின் ஈ மாத்திரை முக அழகிற்காக சேர்க்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல் நாமும் அதை மருந்து கடைகளில் எந்த ஒரு அறிவுறுத்தலும் இல்லாமல் வாங்கி முகத்திற்கும், கூந்தல் வளர்ச்சிக்கும் பயன்படுத்துகிறோம். இவ்வாறு பயன்படுத்துவது நன்மையா அல்லது பக்க விளைவு ஏதேனும் ஏற்படுத்துமா என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு முகத்தில் ஏற்படும் வறட்சியை கட்டுப்படுத்த இந்த மாத்திரைகளை பயன்படுத்தலாம். மேலும் இது தோல் சுருக்கம் ஏற்படுவதை தடுத்து முதுமையை தள்ளிப் போடும். வறண்ட சருமம் உள்ளவர்கள் இரவில் இந்த மாத்திரைகளை தடவி விட்டு காலையில் கழுவி வர நல்ல பலன்களை பெறலாம் முகத்தை பளபளப்பாக்கும்.
கால் வெடிப்புகளில் தடவி வந்தால் வெடிப்பு மறைந்து பாதம் மென்மையாக காட்சியளிக்கும். மேலும் முலங் கைகளில் உள்ள கருமை நிறம் மாற இந்த மாத்திரையை பயன்படுத்தலாம்.
இந்த மாத்திரைகளை நாம் பயன்படுத்தும் போது கடலை மாவு அல்லது ரோஸ் வாட்டர் போன்ற முகப்பூச்சுடன் கலந்து பயன்படுத்துவது சிறந்தது. அவ்வாறு பயன்படுத்தினால் முகத்தில் உள்ள மங்குவையும், சூரிய ஒளியால் ஏற்படும் கருமை நிறம் போன்றவற்றை குறைக்கும். முகத்தில் உள்ள பழைய செல்களை நீக்கி புதிய செல்களை உருவாக்கி முகத்தை பளபளப்பாகும். என்னதான் இது பளபளப்பை கொடுத்தாலும் ரசாயனம் கலந்துள்ளதால் இவற்றை வாரத்திற்கு ஒருமுறை அல்லது மாதத்திற்கு இரண்டு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை கூடவே இல்லையா? அப்போ இந்த டிப்ஸ் எல்லாம் ட்ரை பண்ணுங்க..
இது முகத்திற்கு மட்டுமல்லாமல் கூந்தல் வளர்ச்சிக்கும் உறுதுணையாக விளங்குகிறது .நாம் தினமும் பயன்படுத்தும் எண்ணெயில் இந்த ஆயிலையும் கலந்து தேய்த்து வந்தால் முடி வளர்ச்சியை தூண்டி முடி அடர்த்தியாக்கும். மேலும் பொடுகு வராமலும் பாதுகாக்கும். அதுமட்டுமல்லாமல் கூந்தலுக்கு ஊட்டமளிக்கும் ஹேர் மாஸ்க்கு பயன்படுத்தும் போதும் இந்த ஈ மாத்திரையும் கலந்து தடவி வரலாம்.
இந்த வைட்டமின் ஈ மாத்திரைகளை எண்ணெய் சருமம் உள்ளவர்கள் மற்றும் சென்சிடிவ் சர்மம் உள்ளவர்கள் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்கவும். ஏனென்றால் இந்த விட்டமின் மாத்திரைகள் ஏற்கனவே அதிக எண்ணெய் பசியை தன்மையை கொண்டு உள்ளதால் முகத்தில் முகப்பரு கொப்புளங்கள், மற்றும் சிகப்பு நிற தடிப்புகள் போன்றவற்றை ஏற்படுத்துவதுடன் ஒருவித அரிப்பு எரிச்சலையும் ஏற்படுத்தும். அது மட்டுமல்லாமல் முகத்தில் எண்ணெய் வடிவது போன்று தோன்றும்.
எனவே இவற்றுள் நன்மைகள் இருந்தாலும் இதை பலவித இரசாயனங்களால் தயாரிக்கப்படுகிறது. ஆகவே இந்த மாத்திரைகளை பயன்படுத்துவதை தவிர்த்து நம் இயற்கையாக கிடைக்கக்கூடிய வைட்டமின் ஈ நிறைந்த உணவுகளை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். மீன், முட்டை, அகத்திக்கீரை முருங்கைக்கீரை பாதாம் பருப்பு சூரியகாந்தி விதை பப்பாளி பழம் வேர்க்கடலை போன்றவற்றில் அதிக அளவில் விட்டமின் இ சத்து நிறைந்துள்ளது. இவற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தாலே நாம் மாத்திரைகளை பயன்படுத்த தேவை ஏற்படாது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…