மக்களே உஷார்.! கோடையில் வரும் வெப்ப பக்கவாதம் – நீரிழப்பு… தடுக்கும் உதவும் 10 சத்தான உணவுகள்.!!
கோடை காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறைவால் பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், நம் உடலைப் பற்றி அதிக அக்கறை எடுக்க வேண்டும். நம்மளுடைய உடலில் நீர் பற்றாக்குறை இருந்தால், உடலுக்கு மிகவும் ஆபத்தானது.
குறிப்பாக கோடைக்காலத்தில் வெப்ப நிலை அதிகமாக இருக்கும். இதன் காரணமாக நமக்கும் வெப்ப பக்கவாதம் (Heat stroke ) ஏற்படும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி நீரிழப்பு நோய் ஏற்படுவதற்கான அபாயமும் உள்ளது. எனவே, கோடை காலத்தில் இந்த நோய்கள் வராமல் தடுப்பதற்கு பல வழிகள் உள்ளது. அதில் உணவு சாப்பிடுவதன் மூலமும் நாம் இந்த நோய்கள் வராமல் தடுக்கலாம். அது என்னென்னெ உணவுகள் என்பதை பற்றி பார்க்கலாம்.
வெப்ப பக்கவாதம் – நீரிழப்பு தடுக்கும் உதவும் 10 சத்தான உணவுகள் இதோ..
மோர்
கோடை காலம் தொடங்கிவிட்டாலே போதும் மக்கள் பலரும் மோர் குடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அப்படி குடிக்காதவர்கள் மோர் குடிக்க பழகி கொள்ளுங்கள் ஏனென்றால், மோர் குடிப்பதால் உங்களுடைய உடலில் பல நன்மைகள் ஏற்படுகிறது. கோடைகாலத்தில் மட்டும் கூடுதலாக உப்பு மற்றும் சீரகப் பொடி சேர்த்து மோர் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது.
மோர் சுவையானது மட்டுமல்ல, கோடையில் உங்கள் உடலை வெப்ப பக்கவாதத்திலிருந்து பாதுகாக்கும், மேலும் இது உங்கள் வயிற்றுக்கும் நன்மை பயக்கும். ஏனெனில் இதில் செரிமான குணங்கள் பல இருக்கிறது. மதிய உணவுடன் மோர் சேர்த்து சாப்பிடுவதும் நல்லதது தான்.
புதினா
கோடையில் புதினாவை சட்னியாக பயன்படுத்தினாலும் அல்லது சிரப் தயாரித்தாலும் கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும். புதினாவை துண்டுகளாக வெட்டி கொண்டு அதனை குளிர்ந்த தண்ணீரில் போட்டு ஊறவைத்து அதனுடைய சாற்றை குடிப்பதும் மிகவும் நல்லது.
காலையில் எழுந்தவுடன் இதனை அருந்துவது இன்னுமே நல்லது என்று கூட கூறலாம். இதனை குடிப்பதன் மூலம் உங்களுக்கு வெப்ப பக்கவாத நோய் வருவதை தடுக்கும். எனவே இனிமேல் புதினாவை சட்னியை உங்களுடைய உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.
இளநீர்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் விரும்பி குடிப்பது இளநீர் தான். இந்த இளநீர் வெயில் காலத்தில் மிகவும் உடலுக்கு நல்லது. உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருப்பதில் இளநீர் முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே, இந்த கோடை காலத்தில் தினமும் ஒரே ஒரு இளநீர் குடித்து வந்தால், உடலில் நீர்ச்சத்து குறைபாடு இருக்காது. இதனால் பல நோய்களை தவிர்க்கலாம். குறிப்பாக நீரிழப்பு நோய்கள் வருவதை முற்றிலும் தவிர்க்கலாம்.
எலுமிச்சை ஜூஸ்
கோடை காலத்தில் மட்டுமின்றி பலரும் எலுமிச்சை பலத்தை ஜிஸ் செய்து குடிப்பது வழக்கமான ஒன்று. ஆனால், இந்த கோடை காலத்தில் எலுமிச்சை ஜூஸ் இன்னுமே நமது உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. இது எளிதாக கிடைக்கக்கூடிய ஒன்று தான்.
எனவே, தினமும் வெயிலில் செல்வதற்கு முன் எலுமிச்சை ஜூஸை உட்கொண்டால், அது உங்களை நீரேற்றமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், உங்களுக்கு வெப்ப பக்கவாத நோய் வருவதை தடுக்கும்.
மாம்பழம்
கோடை காலத்தில் மாம்பழங்கள் அதிக அளவு கிடைக்கும். இந்த நேரங்களில் மாம்பழங்களை மக்கள் பலரும் விரும்பி சாப்பிடுவது உண்டு. கோடை காலத்தில் மாம்பழம் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும். அளவோடு மாம்பழங்களை சாப்பிடுவதால் வெப்ப பக்கவாதத்தின் ஆபத்தில் இருந்து நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள்.
அது மட்டுமின்றி உணவு சாப்பிட்ட பிறகு மாம்பழத்தை சாப்பிடுவது உங்களுடைய செரிமானத்திற்கு மிகவும் உதவுகிறது. எனவே, கண்டிப்பாக இந்த கோடை காலத்தில் மாம்பழங்களை உங்களுடைய உணவுகளில் சேர்த்துக்கொள்ளுங்கள். இதனை குலுக்கல்-ஆகவும் செய்தும் குடிக்கலாம்.
பெருஞ்சீரகம்
கோடை காலத்தில் பெருஞ்சீரகத்தை சாப்பிடுவதன் மூலம் உங்கள் உடல் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும், ஏனென்றால், பெருஞ்சீரகம் விதைகளின் விளைவு மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். இதன் காரணமாக இது உங்கள் உணவை மிக விரைவாக ஜீரணிக்க உதவுகிறது.
பெருஞ்சீரகத்தை வெறுமனையாக சாப்பிட பிடிக்காதவர்கள் இதனை ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் குடிப்பது மிகவும் நல்லது. இதனால் நீரிழப்பு நோய் தவிரிக்கப்படுவது மட்டுமின்றி உடல் எடையையும் குறைக்க உதவுகிறது. ஆனால், பெருஞ்சீரகத்தை உணவு உண்ட பிறகு உட்கொள்வதால் பல நன்மைகள் கிடைக்கும்.
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயில் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். எனவே வெள்ளரிக்காவை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடலில் நீர் பற்றாக்குறை என்பதே ஏற்படாது. பலரும் இதனை கோடை காலத்தில் விரும்பி சாப்பிடுவீர்கள் என தெரிகிறது.
இருந்தாலும் வெள்ளரிக்காய் பிடிக்காத காரணத்தால் சாப்பிடாமல் இருப்பார்கள். அவர்கள் இந்த கோடை காலத்தில் மட்டுமே வெள்ளரிக்காயை சாப்பிடுவது மிகவும் நல்லது. இதனை சாப்பிடுவதன் நீரிழப்பு நோயையும் சந்திக்க வேண்டிய அவசியமே இல்லை.
தர்பூசணி
தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்றவற்றிலும் நிறைய தண்ணீர் உள்ளது, எனவே நீங்கள் தர்பூசணியை கோடை காலத்தில் கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும். தர்பூசணி உட்கொள்வதால் உங்கள் உடலில் நீரிழப்பு ஏற்படாது, இது வெப்ப பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கிறது.
அது மட்டுமின்றி தர்பூசணி இருதய நோய்களைத் தடுக்க உதவுகிறதுஆஸ்துமாவின் தீவிரத்தை குறைக்கிறது பல் பிரச்சனைகளை குறைக்கிறது. எனவே கண்டிப்பாக தர்பூசணி சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.
திராட்சை
திராட்சை கோடை காலத்தில் கிடைக்கும் ஒரு ஜூசி பழம். திராட்சையில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளன, இது கோடையில் உங்கள் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. திராட்சை பழம் இனிப்பு சுவை நிறைந்துள்ளது என்பதால் பலருக்கும் இந்த பழம் பிடிக்கும்.
திராட்சையை கோடை காலத்தில் சாப்பிடுவதன் மூலம் நீரிழப்பு நோய் வருவதை தடுக்கலாம் . இதனை ஜூஸ் ஆகா நாம் வீட்டிலே தயார் செய்து சாப்பிடுவதும் மிகவும் நல்லது. இந்த கோடை காலத்தில் நீங்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டிய பழங்களில் இதுவும் முக்கியமான ஒன்று.
துளசி விதை
துளசி விதைகள் சப்ஜா என்றும் அழைக்கப்படுகிறது. இது கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். துளசி விதைகளை எலுமிச்சை அல்லது சிரப்பில் போட்டு இதனை சாப்பிடலாம்.