பெண்கள் பற்றிய சுவாரஸ்யமான ரகசியங்கள்..! படிக்க மறக்காதீங்க..!
பெண்கள் பற்றிய சுவாரஸ்யமான ரகசியங்களை இந்த பதிவில் காணலாம்.
இதை படிக்கும் நீங்கள் பெண்களாக இருந்தால் இந்த ரகசியங்களில் உள்ள குணாதிசயங்களில் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். அல்லது உங்களுக்கே இது போன்ற குணாதிசயங்கள் இருக்கலாம். நீங்கள் ஒருவேளை ஆண்களாக இருந்தால் இது போன்ற குணாதிசயங்கள் தெரிந்த பெண்களை நீங்கள் பார்த்திருக்கலாம். அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு இருக்கலாம். இவை உங்களுக்கு தெரிந்து இருந்தால் நீங்கள் பெண்களை பற்றி நன்கு புரிந்து வைத்துள்ளீர்கள். சரி வாருங்கள் இந்த பதிவிற்கு செல்வோம்.
ஒன்று: பெண்களுக்கு வண்ணங்களை வித்தியாசப்படுத்தி பார்க்க தெரியும். உதாரணத்திற்கு டார்க் நிறம், லைட் நிறம் என்று சிறிய வித்தியாசத்தில் சட்டை இருந்தால் அதனை ஆண்களால் பிரித்து பார்க்க முடியாது. இதே பெண்கள் இந்த சட்டைகளை ஒரே நொடியில் கண்டுபிடித்து விடுவார்கள். பொதுவாகவே பெண்கள் ஆண்களை விட 20 சதவீதம் அதிகமாக நிறங்களை பிரித்து பார்க்கும் தன்மை உடையவர்கள்.
இரண்டு: பெண்களுக்கு எப்படி நிறத்தில் சிறிய வித்தியாசம் இருந்தாலும் கண்டு பிடிக்க தெரிகிறதோ அதேபோல் சிறிய வாசனையையும் கண்டு பிடிக்கும் திறன் பெண்களுக்கு உண்டு. ஆண்களால் சிறு வாசனைகளை அவ்வளவு எளிதாக கண்டுபிடிக்க தெரியாது. ஆனால், பெண்கள் உடனே கண்டுபிடித்து விடுவார்கள்.
மூன்று: பெண்களில் சிலர் உதட்டு சாயம் என்று சொல்ல கூடிய லிப்ஸ்டிக் போட்டுக்கொள்ளும் பழக்கம் உடையவர்களாக இருப்பார்கள். அதுபோன்ற பழக்கம் உங்களுக்கு இருந்தால் இந்த பதிவு உங்களுக்கு பொருந்தும். வருடத்தில் 260 நாட்கள் லிப்ஸ்டிக் போடுவார்கள். அதில் 0.45 கிலோகிராம் அளவு லிப்ஸ்டிக்கை ஒரு வருடத்திற்கு சாப்பிட்டு விடுவார்கள்.
நான்கு: ஆண்கள் திருமணத்திற்கு முன்பு அழகாக இருப்பார்கள். ஆனால், திருமணத்திற்கு பின்பு அவர்கள் உடல் எடை கூடிவிடும். இதற்கு முக்கிய காரணம் பெண்கள் ஆண்களுக்கு அதிகமாக உணவுகளை வழங்குவது. பெண்கள் ஆண்களிடம் முக்கியமாக எதிர்பார்ப்பது, பாதுகாப்பை தான். அதனால் ஆண்கள் திடம் குறைவாக இருந்தால் பெண்களுக்கு பிடிக்காது. இதனால் அதிகமாக உணவை வழங்கி ஆண்களுக்கு வலிமையை அதிகரிப்பார்கள். இன்னொரு காரணம் தனது கணவனை வேறு யாரும் பார்க்கக்கூடாது என்பதற்காக முன்பு இருந்ததைவிட உடல் பருமனாக மாற்றிவிடுவார்கள்.
ஐந்து: பெண்கள் தங்களது உடையில் அதிகமாக கவனம் செலுத்தக் கூடியவர்கள். தங்களுக்கு வசதியாக இருக்கிறதா என்பதை பார்ப்பதைவிட அது அழகாக இருக்கிறதா என்பதைத் தான் அதிகமாக பார்ப்பார்கள். வெளியில் உள்ளவர்கள் தங்களை பார்த்து இந்த உடை அழகாக உங்களுக்கு இருக்கிறது என்று கூறுவதைக் கேட்க தான் பெண்கள் அதிகமாக ஆசைப்படுகிறார்கள். அதனாலேயே அதிகப்படியாக தங்களுக்கு சவுகரியம் இல்லாத உடையாக இருந்தாலும் அதனை அணிந்து கொள்கிறார்கள். ஆனால் ஆண்கள் அப்படி பட்டவர்கள் அல்ல. ஆண்கள் தங்களுக்கு வசதியான ஆடைகளை மட்டுமே அணிகிறார்கள்.
ஆறு: பெண்களை ஆண்களால் முழுமையாக புரிந்துகொள்ள முடியுமா? என்று கேட்டால் அது கேள்விக்குறியாக மட்டுமே இருக்கும். அதற்கு விடை என்பது அளிக்க முடியாது. ஆனால் பெண்கள் எளிமையாக ஆண்களை புரிந்துகொள்வார்கள். ஆண்களுடைய அசைவு, முகபாவனையை அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது வரை சரியாக கணித்து கூறி விடுவார்கள். அந்த அளவுக்குத் திறமை படைத்தவர்கள் பெண்கள்.
ஏழு: ஆண்களை பெண்கள் எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்தாலும் அதனை அவர்களால் கண்டுபிடிக்க முடியாது. குறிப்பாக பின்பக்கத்திலிருந்து பெண்கள் ஆண்களைப் பார்த்தால் ஆண்களால் அதை கணிக்கக் கூட முடியாது. ஆனால் பெண்கள் ஆண்கள் தங்களை எவ்வளவு தூரத்தில் இருந்து பார்த்தாலும் சரி அதனை சரியாக கணித்து விடுவார்கள். எந்த கண்ணோட்டத்தில் யார் பார்க்கிறார்கள் என்பது அவர்களுக்கு பத்தடி தூரத்தில் இருந்தாலும் திரும்பிப் பார்க்காமல் கூட சொல்லி விடுவார்கள்.