White sugar பயன்படுத்துபவரா நீங்கள்…? அப்ப இதை கண்டிப்பா படிங்க…!

WHITESUGAR

நம்மில் பெரும்பாலானோர் டீ, காபி, மற்றும் இனிப்பு பொருட்கள் தயாரிப்பதற்கு வெள்ளை சர்க்கரையை தான் பயன்படுத்துகிறோம். இந்த வெள்ளை சர்க்கரையை நாம் இனிப்புக்காக பயன்படுத்தினாலும், இது நமது உடலுக்கு பல்வேறு வகையான ஆரோக்கிய கேடுகளை ஏற்படுத்துகிறது. வெள்ளை சர்க்கரை என்பது சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கரும்பு அல்லது தேனிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

நாம் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்களில் வெள்ளை சர்க்கரை தான் பயன்படுத்தப்படுகிறது. சாக்லேட், பிஸ்கட், கேக் என பல பொருட்களில் இந்த வெள்ளை சர்க்கரை பயன்படுத்தப்படுகிறது.

உடல் எடை அதிகரிப்பு 

உடல் பருமன் பிரச்னை உள்ளவர்கள் கண்டிப்பாக வெள்ளை சர்க்கரையை தவிர்க்க வேண்டும். வெள்ளை சர்க்கரையில், அதிக அளவிலான கலோரிகள் காணப்படுகிறது. வெள்ளை சர்க்கரை LDL (கெட்ட) கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கலாம், இது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும்.

சர்க்கரை நோய் 

சர்க்கரைநோய் பிரச்னை உள்ளவர்கள் முற்றிலுமாக வெள்ளை சர்க்கரையை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க செய்வதோடு, உடலில் மேலும் பல பிரச்சனைகள் ஏற்பட வழிவகுக்கிறது. கணையம் தான் நமது உடலில் இன்சுலினை சுரக்க செய்கிறது. நாம் அதிகமாக சர்க்கரை சாப்பிடுவதால், நமது உடலில் அளவுக்கு அதிகமாக இன்சுலினை சுரக்க செய்கிறது.

பற்கள் அரிப்பு

வெள்ளை சர்க்கரை நமது பற்களில் கூட பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும் என கூறப்படுகிறது. வெள்ளை சர்க்கரையை நாம் அதிகமாக பயன்படுத்தும் போது, பற்களின் எமினல் எனப்படும் வெளிப்புற அடுக்குகளை அரித்து, பல் அரிப்பு மற்றும் பல் நோய்க்கு வழிவகுக்கும்.

வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக வேறு என்ன பயன்படுத்தலாம்?

தேன், வெல்லம், பழங்கள் போன்ற இயற்கை இனிப்புகள் வெள்ளை சர்க்கரைக்கு ஒரு சிறந்த மாற்றாக பயன்படுத்தலாம். பழங்கள் மற்றும் காய்கறிகள் இயற்கையாகவே இனிமையானவை மற்றும் அவை சர்க்கரைக்கு ஒரு சிறந்த மாற்றாகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்