Pappadam Rice : அப்பளத்தை வைத்து அசத்தலான ரெசிபி இதோ..!
அப்பளம் என்றாலே சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவதுண்டு. அப்பளத்தை பொறுத்தவரையில், அதனை நாம் சாம்பார் சாதம், தயிர் சாதம், புளி குழம்பு என மற்ற உணவுகளுடன் கூட்டு போன்று தான் வைத்து சாப்பிடுவது உண்டு. தற்போது இந்த பதிவில் அப்பளத்தை வைத்து ரைஸ் செய்வது எப்படி என்பது பற்றி பார்ப்போம்.
நாம் மற்ற காய்கறிகளை வைத்து ரைஸ் செய்து சாப்பிட்டு இருப்போம். சிக்கன் ரைஸ், வெஜிடபிள் ரைஸ் என பலவகையில் செய்து சாப்பிட்டிருப்போம். தற்போது இந்த பதிவில் வித்தியாசமான முறையில் அப்பளத்தை வைத்து ரைஸ் செய்வது எப்படி என்பது பற்றி பார்ப்போம்.
தேவையானவை
- அப்பளம் – 3
- கடுகு – சிறிதளவு
- வெங்காயம் – 2
- பச்சைமிளகாய் – 2
- மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
- மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
- தேங்காய் துருவல் – 1 கப்
- கறிவேப்பிலை – 2 கொத்து
செய்முறை
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடான பின் அதில் கடுகு, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு நன்கு வதக்கி கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க : Green Chilli Pickle : பச்சை மிளகாயில் இவ்வளவு சுவையான ரெசிபி செய்யலாமா..? வாங்க பார்க்கலாம்..!
பின்பு துருவிய தேங்காய், மிளகாய் தூள், மஞ்சள் தூள் கருவேப்பிலை இவற்றை போட்டு வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் உடைத்து வைத்துள்ள அப்பளத்தை அதனுள் போட்டு கிளறி விட வேண்டும். பின்பு நமக்கு தேவையான அளவு சாதத்தை அதனுள் போட்டு கிளறி எடுத்து பரிமாறலாம். இப்போது சுவையான அப்பள சாதம் தயார்.
நாம் அப்பளத்தை பொறித்து சாதத்தோடு சாப்பிடுவதை விட, அப்பளத்தை வைத்து சாதம் செய்து சாப்பிடுவது மிகவும் சுவையாக இருக்கும். இந்த சாதத்தை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர்.