பச்சிளம் குழந்தைகளுக்கு ஆயில் மசாஜ்..! சிறந்த ஆயில் எது தெரியுமா ..?
குழந்தைக்கு பசி எடுக்கும் போது அல்லது தூக்கம் வரும் சமயத்திலோ ஆயில் மசாஜ் செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

சென்னை- குழந்தை பராமரிப்பு முறையில் ஆயில் மசாஜ் செய்வதன் நன்மைகள் பற்றியும் மசாஜ் செய்ய சிறந்த எண்ணெய் எது என்பதைப் பற்றியும் குழந்தை நல மருத்துவர் டாக்டர் ஸகுல் ராமானுஜ முகுந்தன் தனது யூட்யூப் பக்கத்தில் சில குறிப்புகளை கூறியுள்ளார்.
குழந்தைகளுக்கு ஆயில் மசாஜ் செய்வதன் நன்மைகள் ;
பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பில் ஆயில் மசாஜ் செய்வதால் குழந்தைகளுக்கு தசைகள் ரிலாக்ஸ் ஆகி நல்ல தூக்கத்தை கொடுக்க உதவுகிறது. மேலும் ஆரோக்கியமான முறையில் உடல் எடை அதிகரிக்கவும் உதவுகிறது. குழந்தையின் தோல் வறட்சி இல்லாமல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருக்க உதவுகிறது .தசை மற்றும் எலும்பு வலுப்பெறுகிறது .
எப்போது ஆயில் மசாஜ் செய்ய வேண்டும்?
குழந்தையின் தொப்புள் கொடி விழுந்த பிறகு ஆயில் மசாஜ் செய்து குளிக்க வைத்துக் கொள்ளலாம் .குறிப்பாக குழந்தையின் எடை இரண்டரை கிலோவிற்கு மேல் இருக்க வேண்டும். எடை குறைவாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி குளிக்க வைக்க வேண்டும்.
குழந்தைக்கு பசி எடுக்கும் போது அல்லது தூக்கம் வரும் சமயத்திலோ ஆயில் மசாஜ் செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். குழந்தை பால் குடித்து ஒன்று அல்லது அரை மணி நேரம் கழித்து மசாஜ் செய்வது சிறந்ததாகும். மேலும் ஆயில் மசாஜ் செய்து 10 நிமிடம் கழித்து குளிக்க வைத்துக் கொள்ளலாம். முதலில் கை கால்களில் மசாஜ் செய்வதை துவங்கி பிறகு உடல் பகுதி செய்து கடைசியாக தலைக்கு ஆயிலை வைக்க வேண்டும்.
ஆயில் மசாஜ் செய்ய சிறந்த எண்ணெய் எது ?
பச்சிளம் குழந்தைக்கு ஆயில் மசாஜ் செய்வதற்கு தேங்காய் எண்ணெய் சிறந்தது என குழந்தைகள் நல மருத்துவர் ஸகுல் ராமானுஜ முகுந்தன் கூறுகிறார். மேலும் வெர்ஜின் தேங்காய் எண்ணெய் மிகவும் சிறந்தது என்றும் கூறுகிறார்.
வீட்டிலேயே தயாரிக்கும் எண்ணெய் முறை;
தேங்காயை துருவி பால் எடுத்து ஒரு அகலமான பாத்திரத்தில் அந்த தேங்காய் பாலை ஊற்றி மிதமான தீயில் வைத்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். அந்த தேங்காய்ப்பால் நன்கு சுண்டி வரும் வரை கிளற வேண்டும். அதன் நிறம் பொன்னிறமாகி எண்ணெய் பிரிந்து வரும்வரை மிதமான தீயில் கிளறி கொண்டே இருக்க வேண்டும்.
பிறகு நன்கு எண்ணெய் பிரிந்து வந்த பிறகு வடிகட்டி எடுத்து ஆற வைத்து கண்ணாடி பாட்டிலில் சேகரித்து வைத்து அந்த எண்ணெயை குழந்தைக்கு பயன்படுத்தி வருவது மிகவும் சிறந்ததாகும்.
என்னதான் குழந்தைகளுக்கு என்று பலவித எண்ணெய்கள் இருந்தாலும் வீட்டிலேயே முறையாக தயாரித்து பயன்படுத்தும் எண்ணெய்களுக்கே அதிக மருத்துவ பலன்கள் உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
அவரை சமாளிப்பது எல்லாம் திமுகவுக்கு தூசு மாதிரி…அமைச்சர் ரகுபதி விமர்சனம்..சீமான் சொன்ன பதில்?
March 2, 2025
குட் பேட் அக்லி படத்தில் அஜித் போட்டிருக்கும் டிரஸ் எவ்வளவு தெரியுமா? விலை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!
March 2, 2025