பீட்ரூட்டை நம் உணவுகளில் பலவிதமாக செய்து ருசித்திருப்போம். ஆனால் அதை வைத்து குளியல் பொடி செய்யலாம் .வாங்க அது செய்வது எப்படி என்றும் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்றும் இப்பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
அரிசி மாவு= ஒரு கப்
பீட்ரூட்= மூன்று
ரோஸ் வாட்டர்
பால்
செய்முறை
பீட்ரூட்டை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும், கட்டி இல்லாமல் நைசாக அரைத்துக் கொள்ளவும். பிறகு மிதமான தீயில் பீட்ரூட்டை அதன் தண்ணீர் வற்றும் வரை கிளறி விட வேண்டும். பிறகு அதை ஆற வைத்து,ஆறிய பிறகு அதிலே அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து கிளற வேண்டும். பின்பு ஒரு நாள் முழுவதும் அதை வெயிலில் காய வைக்க வேண்டும் ,ஏனென்றால் அதில் ஈரப்பதம் கொஞ்சம் இருக்கும் அதனுடன் வைத்தால் விரைவில் கெட்டுப் போகும். காய்ந்த பிறகு அதை சல்லடை வைத்து சலித்து ஒரு கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைத்து 15 நாள் வரை பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் முறை
சோப்பு போட்டு குளித்த பிறகு இந்த பீட்ரூட் பவுடரை இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் அல்லது உங்கள் உடலுக்கு தேவையான அளவு எடுத்துக் கொண்டு ரோஸ் வாட்டர் அல்லது காய்ச்சிய பாலை பாலாடையுடன் சேர்த்து நன்கு கலந்து உடலில் தேய்த்து ஐந்து நிமிடம் வைத்து மசாஜ் செய்து பிறகு கழுவிக்கொள்ளலாம். இவ்வாறு தொடர்ந்து ஒரு மாதங்கள் பயன்படுத்த வேண்டும்.
இதில் நாம் அரிசி மாவு சேர்த்துள்ளதால் நல்ல ஸ்கிரப்பராக பயன்படுகிறது. பீட்ரூட் சருமத்திற்கு நல்ல நிறத்தை கொடுக்கிறது. ஒரு மாதங்கள் இதை பயன்படுத்தி வந்தால் நல்ல மாற்றத்தை காண முடியும்.
சிட்னி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில்…
சென்னை : வேலூர் மாவட்டம் காட்பாடியில் காந்திநகர் பகுதியில் உள்ள திமுக எம்பி கதிர் ஆனந்த் வீட்டிலும், திமுக நிர்வாகி…
சென்னை : கேரளாவில் இருந்து கோவைக்கு 18 டன் சமையல் எரிவாயுவை ஏற்றி வந்த டேங்கர் லாரி ஒன்று கோவை…
கொச்சி : கேரளா மாநிலம் கொச்சியில் பாலாரிவட்டம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கலூர் மைதானத்தில் நடிகை திவ்யா உன்னி…
கோவை : கேரளா மாநிலம் கொச்சினில் இருந்து கோவைக்கு சமையல் எரிவாயு எடுத்து வந்த டேங்கர் லாரியானது கோவை அவினாசி…
சென்னை : ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை வழங்கும்.…