அட இவ்வளவு நாளா தெரியாம போச்சே..! ஏலக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..?
நாம் அனைவருக்கும் பொழுது விடிவதே டீயுடன் தான். காலையில் எழுந்தவுடன் டீ குடித்தால் தான் நமது உடலுக்கு புத்துணர்ச்சி கிடைத்தது போன்ற உணர்வு இருக்கும். அந்த வகையில் ஏலக்காய் டீ குடித்து வந்தால் அது நமது உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தருகிறது.
ஏலக்காய் டீயின் நன்மைகள்
ஏலக்காய் ஒரு நல்ல மனநிலை ஊக்கியாகும், இது மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. ஏலக்காய் செரிமானத்தை மேம்படுதுவதோடு, வயிற்று உப்புசத்தை குறைக்கவும், செரிமான கோளாறுகளைத் தடுக்கவும் உதவுகிறது. இதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது.
ஏலக்காய் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்கள் அதிகம் காணப்படுவதால், இது உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகின்றன. அப்போது இந்த பதிவில் ஏலக்காய் டீ செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- தண்ணீர் – 1 கப்
- ஏலக்காய் பொடி – 1 தேக்கரண்டி
- சர்க்கரை அல்லது தேன் – தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அதனுள் ஏலக்காய் பொடியை போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். அதனுடன் கிராம்பு சேர்த்து கொதிக்க வைத்தாலும் டீயின் மணம் நன்றாக தான் இருக்கும்.
கொதிக்க வைத்து இறக்கிய பின் அதனுள் சர்க்கரை அல்லாது சீனியை உங்களுக்கு தேவையான அளவு சேர்த்து கலக்கி கொள்ள வேண்டும். இப்போது சுவையான, மணமான ஏலக்காய் டீ தயார்.