பெட்டிக்கடை தேன் மிட்டாய் இனி வீட்டிலே செய்யலாம்..!

90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

honey candy (1)

சென்னை –90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

தேவையான பொருள்கள்;

  • மைதா =கால் கிலோ
  • சர்க்கரை =கால் கிலோ
  • பேக்கிங் சோடா =கால் ஸ்பூன்
  • பேக்கிங் பவுடர் =கால் ஸ்பூன்
  • தயிர்= இரண்டு ஸ்பூன்
  • நெய்= ஒரு ஸ்பூன்
  • ஃபுட் கலர்= சிறிதளவு
  • எண்ணெய் = பொரிக்க தேவையான அளவு

maida (1) (1)

செய்முறை;

மைதா மாவுடன் பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடரை சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் தயிர், நெய் ஆகியவற்றையும் சேர்த்து பிசைந்து கொள்ளவும். பிறகு ஃபுட் கலர் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். மாவிற்கு நன்கு அழுத்தம் கொடுத்து உள்ளங்கைகளால் சற்று ஸ்டிக்கியாக பிசைந்து கொள்ள வேண்டும். பிசைந்த மாவை நான்கு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். நான்கு மணி நேரம் கழித்த பின் மாவை வட்ட வடிவில் சப்பாத்தி சைசிற்கு   தட்டி  நாசல் அல்லது சிறிய வாட்டர் பாட்டில் மூடியால் அச்சுபோல் செய்து கொள்ள வேண்டும் .கையில் உருட்டினால் தேன் மிட்டாய் கடினமாக இருக்கும் .அதனால் இது போல் அச்சுவைத்து சிறிது சிறிதாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

sugar (3) (1)

மற்றொருபுறம் சர்க்கரை பாகு தயார் செய்து கொள்ள வேண்டும். இரண்டு கப் சர்க்கரைக்கு ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஒரு கம்பி பதம் வரும்வரை பாகு தயார் செய்து கொள்ளவும். இப்போது பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு காய வைத்துக் கொள்ளவும். பிறகு மிதமான தீயில் வைத்து அச்சாக செய்து வைத்துள்ள மாவை பொறித்தெடுக்கவும். அதன் நிறம் தேன் மிட்டாய் நிறத்திற்கு மாறி வரும்போது எடுத்து விடவும் .சூடாக இருக்கும் போதே சர்க்கரை பாகுவில் ஊறவைத்து விடவும். பிறகு 15 நிமிடம் கழித்து எடுத்து விடவும் .இப்போது 90 கிட்ஸ் நினைவுகளை தூண்டும் அட்டகாசமான சுவையில் தேன் மிட்டாய் தயார்..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்