பழுத்த வாழைப்பழத்தை வைத்து தலை முடியை சிக்கு இல்லாமல் ஷைனிங்காக மாற்ற முடியும்.
பெண்களுக்கு பொதுவாக தலைமுடி மேல் அதிக கவனம் உண்டு. முடியை நன்கு பராமரித்து கொள்வார்கள். முடி அதிகமாக வளர என்ன செய்ய வேண்டும் என்பதை தேடித்தேடி தெரிந்து கொண்டு அதை பயன்படுத்துவார்கள். ஆனாலும் பார்லருக்கு சென்று பெண்கள் முடியை ஸ்ட்ரெயிட்டனிங் அல்லது கெரட்டின் ட்ரீட்மென்ட் செய்து கொண்டதுபோல் அழகாக இருப்பதில்லை. அதனாலேயே பலரும் தலைமுடியை ஷைனிங்காக மாற்றுவதற்கு பார்லருக்கு சென்று வருகின்றனர்.
ஆனால் வீட்டில் எளிமையாக பார்லருக்கு சென்று வந்ததுபோல் முடியை ஷைனிங்காக, சிக்கலில்லாமல் மாற்றிவிடலாம். அதற்கு எளிய வழி வாழைப்பழம். பழுத்த வாழைப் பழத்தை வைத்து எப்படி முடியை ஷைனிங்காக மாற்றுவது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். இதற்கு தேவையான பொருள்கள் பழுத்த வாழைப்பழம் ஒன்று, தேங்காய் பால் கால் கப், தேங்காய் எண்ணெய் இரண்டு ஸ்பூன். முதலில் மிக்ஸியில் பழுத்த வாழைப்பழத்தை தோல் உரித்து சேர்த்துக்கொள்ளுங்கள்.
அதனுடன் திக்கான தேங்காய் பாலையும் சேர்த்து நன்கு அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். இதனை ஒரு கிண்ணத்தில் மாற்றிக்கொள்ளவேண்டும். இதனுடன் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணையையும் சேர்த்து கலந்து நல்ல ஒரு பேக்காக கலந்து கொள்ளுங்கள். இந்த பேக்கை தலைமுடிக்கு பயன்படுத்த வேண்டும். இந்த பேக் தயார் செய்த உடனேயே தலைக்கு அப்ளை செய்து விட வேண்டும். இதனை லேட்டாக அப்ளை செய்யக்கூடாது. அதனால் தயாரித்த உடனேயே தலையில் நன்கு வேர்கால்களில் படுமாறு அப்ளை செய்யவும்.
பிறகு நுனி வரை அப்ளை செய்து கொள்ளவும். இதை அப்படியே 30 நிமிடம் வரை காய வைத்து விடுங்கள். பிறகு மைல்டான ஷாம்பு போட்டு தலைக்கு குளித்துவிடுங்கள். உங்களுக்கு அதிகமாக சிக்கல் ஏற்படும் என்றால் இப்படி செய்தால் நிச்சயமாக சிக்கு குறைந்திருப்பதை நீங்களே உணர முடியும். அதே போல் முடி வறட்சியாக சிலருக்கு இருக்கும், இதை நீங்கள் செய்து பார்த்தால் முடி வறட்சியின்றி ஷைனிங்காக இருப்பதை உணரலாம். பார்லருக்கு சென்று வந்தால் எப்படி அழகாக ஸ்டைலாக பளபளவென மின்னுமோ அதேபோல பழுத்த வாழைப்பழத்தை கொண்டு எளிமையாக வீட்டிலேயே நாம் மாற்றிக் கொள்ள முடியும்.
இதை செய்ய முக்கியமாக பழுத்த வாழைப்பழத்தை தான் பயன்படுத்தவேண்டும். சாப்பிட பயன்படுத்தக் கூடிய அளவு இருக்கக்கூடிய வாழைப்பழத்தை பயன்படுத்தினால் அந்த அளவு சிறப்பான முடிவு கிடைக்காது. அதனால் பழுத்த வாழைப்பழத்தை கொண்டு பயன்படுத்தி பாருங்கள். நிச்சயமாக முடி பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும். முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும். முடி கொட்டும் பிரச்சனை இருந்தாலும் அதுவும் குறையும். எளிமையான இந்த குறிப்பை பயன்படுத்தி முடியை அழகாக மாற்றிக் கொள்ளுங்கள்.
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…