நவராத்திரி மூன்றாம் நாள் ஸ்பெஷல்.! தித்திப்பான சுவையில் சர்க்கரை பொங்கல் செய்முறை..!
நவராத்திரியின் மூன்றாம் நாள் பிரசாதமான சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
சென்னை –நவராத்திரியின் மூன்றாம் நாள் பிரசாதமான சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
தேவையான பொருள்கள்;
- பச்சரிசி= ஒரு கப்
- பாசிப்பருப்பு= கால் கப்
- வெல்லம் =இரண்டு கப்
- நெய் =கால் கப்
- முந்திரி திராட்சை =ஒரு கைப்பிடி அளவு
- ஏலக்காய் =ஒரு ஸ்பூன்
செய்முறை;
பாசிப்பருப்பை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது அரிசி மற்றும் பருப்பை கழுவி அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு அதை குக்கரில் சேர்த்து ஆறு கப் தண்ணீர் ஊற்றி 3 விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும். இப்போது வெல்லத்தை பொடித்து அதை அரை கப் தண்ணீர் சேர்த்து கரைத்து எடுத்துக் கொள்ளவும்.
கரைத்த வெல்லத்தை வேக வைத்துள்ள பொங்கலில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் .மிதமான தீயில் வைத்து கைவிடாமல் கிளற வேண்டும். இப்போது ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து அதில் முந்திரி திராட்சையை வறுத்து எடுத்து பொங்கலில் சேர்த்து கலந்து விடவும் .பிறகு ஏலக்காய் தூளை சேர்த்து நன்கு கிளறிவிட்டு இறக்கினால் தித்திப்பான சுவையில் பொங்கல் தயாராகிவிடும்.