நவராத்திரி ஸ்பெஷல்.! புளியோதரை டேஸ்டா வர இந்த பொருளை சேத்துக்கோங்க ..!
நவராத்திரி பூஜையின் இரண்டாம் நாள் நெய்வேத்தியமான புளியோதரை செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
சென்னை –நவராத்திரி பூஜையின் இரண்டாம் நாள் நெய்வேத்தியமான புளியோதரை செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
தேவையான பொருட்கள்;
- புளி = பெரிய எலுமிச்சை அளவு
- கடலைப்பருப்பு= ஒரு ஸ்பூன்
- கருப்பு எள்ளு= ஒரு ஸ்பூன்
- மிளகு =ஒரு ஸ்பூன்
- கொத்தமல்லி விதை =ஒரு ஸ்பூன்
- வெல்லம்= ஒரு ஸ்பூன்
- வெந்தயம்= அரை ஸ்பூன்
- பெருங்காயம் =அரை ஸ்பூன்
- காய்ந்த மிளகாய்= 4
- வேர்க்கடலை= 50 கிராம்
- மஞ்சள் தூள்= ஒரு ஸ்பூன்
- நல்லெண்ணெய் =4 ஸ்பூன்
செய்முறை;
முதலில் புளியை ஊற வைத்துக் கொள்ளவும். அதேபோல் சாதத்தையும் வடித்து ஆற வைத்துக் கொள்ளவும். இப்போது ஒரு பாத்திரத்தில் கடலைப்பருப்பு ,மிளகு, கருப்பு எள்ளு ,கொத்தமல்லி விதைகள் ஆகியவற்றை மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவும் .வெந்தயத்தையும் தனியாக வறுத்து பிறகு அதனுடன் சேர்த்து பொடியாக்கி வைத்துக்கொள்ள வேண்டும் .ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து மற்றும் வேர்க்கடலை ,காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து புளிக்கரைசலை ஊற்றவும் .
பிறகு மஞ்சள் தூள், பெருங்காயம் ,தேவையான அளவு உப்பு சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்த பிறகு வெல்லம் ஒரு ஸ்பூன் சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விட வேண்டும். இப்போது நாம் அரைத்து வைத்துள்ள அந்த பொடியை மூன்று ஸ்பூன் அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும் .பொடி சேர்த்த பிறகு கொதிக்க வைக்க கூடாது. இப்போது ஆற வைத்துள்ள சாதத்தை சேர்த்து நன்கு கிளறி விட்டால் சுவையான மணக்க மணக்க புளியோதரை தயாராகிவிடும்.